court

img

நடுக்கடலில் குமரி மீனவர்கள் சுட்டுக் கொலை.... இத்தாலிய வீரர்கள் மீதான வழக்கை முடித்து வைக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு.....

புதுதில்லி:
நடுக்கடலில் இந்திய (குமரி) மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலிய வீரர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி அவசர மனு ஒன்றை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கொல்லப்பட்ட வர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு இந்திய அரசு மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கு இடையில் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேட்டுக்கொண்டார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத்திய அரசின் இந்த மனு வெள்ளியன்று (ஏப்.9) பரிசீலி க்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பும் கடந்த ஜூலை மாதம், சட்ட நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. படையினர் மீது இத்தாலியில் வழக்குத் தொடரலாம் என்றும் குடும்பங்களுக்கு இத்தாலி இழப்பீடு வழங்கும் என்றும் மத்திய அரசு வாதிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலைப்பாடு அறியப்பட வேண்டும் என்றும் போதிய இழப்பீடுவழங்காமல் சட்ட நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இத்தாலிய வீரர்களைத் தண்டிக்க இந்தியாவுக்கு அதிகாரம்இல்லை என்று ஹேக்கில் உள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. மத்திய அரசின் தளர்வான நிலைப்பாடே இந்த பின்னடைவுக்கு காரணமாகும். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் மத்திய அரசு முன்வரவில்லை.பிப்ரவரி 2012 இல் கன்னியா குமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் மீது இத்தாலி கப்பல் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அஜிஸ் பிங்க் என்ற குமரி மாவட்ட மீனவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜாலஸ்டின் என்ற மீனவரும் கொல்லப்பட்டார்கள். படகில் இருந்த மற்ற 8 மீனவர்களும் தங்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரு மாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

;