court

img

ஒரேமாதிரியான கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குங்கள்... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுப்பதற்குள் கொரோனா 3-வது அலையும் முடிந்துவிடும்.... உச்சநீதிமன்றம் கடும் சாடல்....

புதுதில்லி:
கொரோனா தொற்றால் உயிரிழந்த வர்களுக்கு இறப்புச் சான்றிதழை ஒரே மாதிரியாக வழங்க வழிகாட்டி நெறிமுறை களை உருவாக்குங்கள். இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை எடுங்கள் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம்,  இப்படியே தாமதித்தால் மூன்றாவது அலையும் முடிந்துவிடும் என்று ஒன்றிய  அரசை கடுமையாகச் சாடியுள்ளது.

கொரோனா தொற்றால் இறந்தவர் களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் கவுரவ்குமார் பன்சால், ரீபக் கன்சால் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனு மீது  உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர் ஷா, அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழ மையன்று மீண்டும்  விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாதிரியான இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை ஒன்றிய அரசு உருவாக்க கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வழங்குகிறோம்.இது தொடர்பாக ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கையை எடுங்கள். இப்படியே தாமதித்தால் மூன்றாவது அலையும் முடிந்துவிடும்.செப்டம்பர்  11-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு இது தொடர்பாக பிரமாணப் பத்திரம்தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்பர் 13 அன்று  இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்” என்று உத்தர விட்டனர்.

;