court

img

மோடி ஆட்சியில் நிலுவை வழக்குகள் அதிகரிப்பு....

புதுதில்லி:
உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 68,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, இந்தாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் நிலுவையில் உள்ளவழக்குகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் 1.7 சதவிகிதம் அதிகரித்த நிலையில், 2020ஆம் ஆண்டு, இது1.4 சதவிகிதமாகவும் 2021ஆம் ஆண்டு, 4.3 சதவிகிதமாகவும் உயர்ந்தது. சாதாரணகாலத்தை காட்டிலும், கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்றம் அதிக நேரம் செயல்பட்டுள்ளது.இருப்பினும், வரலாறு காணாத அளவில்நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரித்துள்ளன. நீதிமன்ற விசாரணை நேரடியாக நடைபெறாமல் இணையத்தில் நடைபெற்ற காரணத்தால் இது நிகழ்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு, 822 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இது, 2020ஆம் 1,024ஆகவும் 2021ஆம் ஆண்டு 2,811ஆகவும் அதிகரித்தது.

நீதிபதிகள் பற்றாக்குறை
2019- ஜனவரியில் 59,859 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2020- இல் இது 58,168- ஆகக் குறைந்தது, 2021-ஆம் ஆண்டில் தற்போது 67,897 வழக்குகள் நிலுவையில் உள்ளன.அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருப்பதால், நிலுவையில் உள்ள வழக்குகள் மேலும் அதிகரிக்க உள்ளன. மொத்தமுள்ள 34 நீதிபதி பணியிடங்களில் 27 நீதிபதிகளே பணியில் உள்ளனர்.அதுமட்டுமின்றி, மேலும் இரண்டு நீதிபதிகள் இந்தாண்டும் மூன்று நீதிபதிகள் அடுத்தாண்டும் ஓய்வு பெறவுள்ளனர். 1950-ஆண்டைக் காட்டிலும் நீதிபதிகள் நான்குமடங்கு அதிகமாக இருக்கும் நிலையிலும் இந்த சிக்கல் நீடிக்கிறது.

;