court

img

மோடியை விமர்சித்து போஸ்டர் வெளியிட்டால் வழக்கா? 25 பேர் மீதான எப்ஐஆரை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.....

புதுதில்லி:
தில்லியில் பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக 25பேர் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“நம்முடைய குழந்தை களுக்குத் தேவைப்படும் தடுப்பூசி களை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்” என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி தில்லியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்த மத்தியபாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறையினர் இதுவரை 20-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து 25 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்த கைதை ரத்து செய்யக்கோரியும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய காவல் ஆணையர், காவல் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிடக் கோரியும்  வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து பிரதீப் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியலமைப்புச் சட்டம், ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள பேச்சு மற்றும் கருத்துரிமையைப் பொதுக்காரணத்துக்காகப் பயன்படுத்த லாம் என நீதிமன்றம் பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சமூக வலைதளத்தில் கொரோனா காலத்தில்மருத்துவ உதவி கோரி யாரும் கருத்துகளைப் பதிவிட்டால், அரசுவழக்கு ஏதும் பதிவு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையை மக்கள் கேள்வி கேட்டால் அது கிரிமினல் குற்றமாகாது.

ஆனால், தடுப்பூசி தொடர்பாக கருத்துகளைத் தெரிவித்ததற்கும், போஸ்டர் ஒட்டியதற்கும் கைதுசெய்யப்பட்டது நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாகச் செயல்படுவதாக உள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும், அரசின் தடுப்பூசிக் கொள்கைக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதற்காக அப்பாவி மக்கள் மீது முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.பள்ளிப் படிப்பை நிறுத்திய 19 வயது நபர், ரிக்சா ஓட்டுநர், 61 வயதுமுதியவர் உள்ளிட்ட 25 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும், கைதை ரத்துசெய்யவும் காவல் ஆணையருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என்றுதெரிவித்தார்.

;