court

img

கொரோனா 3ஆவது அலையைத் தடுக்க தயாராகுங்கள்.... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று பரவலின் மூன்றாவது அலையை தடுக்க மத்திய மாநில அரசுகள்   இப்போதே தயாராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், இது எந்த நேரத்தில் தாக்கி எப்போது உச்சத்தை அடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும்மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் எச்சரித்திருந்தார்.இதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என்று வியாழனன்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மே 6 அன்று  கொரோனா தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில், நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு கூறுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ்மூன்றாவது அலை தாக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். இரண்டாவது அலை இளைஞர்களையே அதிகம் தாக்கியுள்ளது. இதனால் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இப்போதே மத்திய மாநில அரசுகள் தயாராக வேண்டும். மேலும் எம்.பி.பி.எஸ் முடிந்த மாணவர்கள் மற்றும் பி.ஜி.யில் சேர இருக்கும் மாணவர்களை கொரோனா பணியில் பயன்படுத்துவது குறித்து மாநில அரசுகள் ஆராய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

;