court

img

உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு கொரோனா - காணொலி மூலம் வழக்குகள் விசாரணை

உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் காணொலி மூலம் வழக்குகள் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 904 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உச்சநீதிமன்றத்தில் 50 சதவிகித பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 44 பணியாளர்களுக்கு பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி வழியே வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.  நீதிமன்ற அறைகள் உள்பட நீதிமன்ற வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் தற்போது பணிகள் நடந்து வருகின்றன.
 

;