court

img

இஸ்ரோ ஊழல் குறித்த சதித்திட்டம் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு....

புதுதில்லி:
இஸ்ரோ உளவு வழக்கில் உள்ள சதித்திட்டம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. சிபிஐ தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஜெயின் குழுவின் விசாரணை அறிக்கையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாதுஎன்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அறிக்கையின் கண்டுபிடிப்புகள் தீவிரமானவை என்றும், அந்த அறிக்கையை நம்பி நாராயணனிடம் ஒப்படைக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அறிக்கையின் நகலை வழங்குமாறு அதிகாரிகள் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக நம்பிநாராயணன் தெரிவித்தார். இது தனக்கு எதிராக புனையப்பட்ட வழக்கு, என்பதை நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையமும் உறுதி செய்துவிட்டன. இந்த சதித்திட்டத்தில் உளவுத்துறை (ஐபி) உட்பட பல்வேறு தரப்பினருக்கு தொடர்பு உள்ளது, அவை கண்டறியப்படவே தற்போது சிபிஐ விசாரணை. இது முன்னதாகவே நடத்தியிருக்க வேண்டும் என்று நம்பி நாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

;