court

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்பு.....

புதுதில்லி:
உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா ஏப்ரல் 24 சனிக்கிழமையன்று பொறுப்பேற்றுக்கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பாப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.அடுத்ததலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி. ரமணாவை நியமிக்கலாம் என மத்தியஅரசுக்கு பரிந்துரைத்தார். இதனை மத்தியஅரசு ஏற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கு  அனுப்பியது .கடந்த 6-ம்தேதி புதிய தலைமை நீதிபதியாகஎன்.வி.ரமணாவை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 இதைத்தொடர்ந்து ஏப்ரல் 24 சனிக்கிழமையன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் எளிமையான முறையில் நடந்த பதவிஏற்பு நிகழ்ச்சியில் என்.வி. ரமணாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு ஆகஸ்ட்  26 வரை, என்.வி. ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்படுவார். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தலைமை நீதிபதியாக வரும் முதல் நீதிபதி ரமணா என்பது குறிப்பிடத்தக்கது.

என்.வி.ரமணா, 1957 ஆம்ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பொன்னாவரம் எனும் கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1983-ஆம் ஆண்டு  வழக்கறிஞராக என்.வி.ரமணா தன்னை பதிவு செய்து கொண்டார். ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் 2000 ஆம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014 ஆம் ஆண்டு  உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். ஜம்மு - காஷ்மீருக்கான 370சட்டப்பிரிவை மத்திய பாஜக அரசுரத்து செய்த பின்னர்  அங்கு இணையதள பிராண்ட்பேன்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இணையதள உரிமையும் அடிப்படை உரிமைதான் என்று நீதிபதி ரமணா தீர்ப்பளித்து, மீண்டும் இணைதள இணைப்பை வழங்க உத்தரவிட்டார்.

;