court

img

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர முன் அனுமதி வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி,நவம்பர்.06- அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை முன் அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் ஐஏஎஸ் அதிகாரி ஆச்சார்யா மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு  குற்றவியல் சட்டம் பிரிவு 171 இன் கீழ் தேவையான முன் அனுமதி இல்லாததால், விசாரணை உத்தரவுகளை நீடிக்க முடியாது என்று தெலுங்கான உயர்நீதிமன்றம் கூறியது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு முன் அரசாங்கத்திடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.