cinema

img

பால் வாக்கரின் மகளுக்குத் திருமணம் நடத்தி வைத்த வின் டீஸல் 

பால் வாக்கரின் மகளின் திருமணத்தைத் தந்தை ஸ்தானத்தில் நடத்தி வைத்த வின் டீஸலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ் படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் பிரபல நடிகர் பால் வாக்கர். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். 

இந்நிலையில், வெள்ளியன்று பால் வாக்கரின் மகள் மெடோ வாக்கரியாவுக்கு நடைபெற்ற திருமணத்தின் போது, பால் வாக்கருக்கு பதிலாக அவரது நண்பரும், சக நடிகருமான வின் டீஸல் மனப் பெண்ணின் கைகளைப் பிடித்து அழைத்து வந்தார். 

வின் டீசல், மறைந்த தனது நண்பர் பால் வாக்கரின் நினைவாகத் தனது மகளுக்குப் பால் என்று பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

;