cinema

img

சிறந்த இந்தியத் திரைப்படமாக கர்ணன் தேர்வு

பெங்களூரு இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக கர்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லால், நட்டி என்கிற நடராஜன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான கர்ணன் படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில், சமீபத்தில் பெங்களூரு இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டன. இந்த விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

;