cinema

img

தேசிய திரைப்பட விருதுகள்...  "அசுரன்" படத்துக்கு 2 விருதுகள்... 

தில்லி 
67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு திரைத்துறை முடங்கியதால் தேசிய விருது அளிக்கும் நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு மட்டும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த படமாக வெற்றிமாறன் இயக்கிய சாதிய வன்முறையை பிரதிபலிக்கும் படமான "அசுரன்" படத்திற்கு வழங்ப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது. ஏற்கனெவே "ஆடுகளம்" படத்திற்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். ஆடுகளம் படத்தை வெற்றிமாறன் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் "சூப்பர் டீலக்ஸ்" படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ‘ஒத்த செருப்பு  - சைஸ் 7’ படம், சிறப்பு தேசிய விருது மற்றும் சிறந்த ஒலிப்பதிவு (ரசூல் பூக்குட்டி) என இரண்டு விருதுகளை வென்றது.

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

;