cinema

img

புத்ததேவ் தாஸ்குப்தா : இந்திய சினிமாவில் மாயகோவ்ஸ்கி....

சத்யஜித் ரேயின் கவித்துவமான மனிதநேயம், மிருணாள் சென்னின் கொந்தளிப்பான அரசியல் ஆகியவற்றின் கலவையான படைப்பாளி புத்ததேவ் தாஸ்குப்தா என்று கூறப்படுவதுண்டு. புத்ததேவ், இந்திய சினிமாவின் கவிஞர். சமரசமற்ற கவிஞர். சிறு வயதிலேயே சினிமா மீது ஆர்வம் காட்டிய அவர் பின்னர் கல்கத்தா பிலிம் சொசைட்டியின் திரையிடல்களைப் பின்பற்றிய போதிலும், தன்னை ஒரு கவிஞராக நிலைநிறுத்திக் கொண்டு திரைப்படத் துறையில் நுழைந்தார். 

அதுவும் ஒரு குறும்படம் மூலம். முழு நீள திரைப்படங்களை எடுப்பதற்கான முயற்சியல்ல அது. பத்து நிமிட திரைப்படமான ‘தி கன்டென்ட் ஆப் லவ்’ (1968) இல், புத்ததேவ் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்த முயன்றார், அதற்கு திரைப்படம் தனக்கு பலனளிக்கும் என்பதை அவர் உணர்ந்தார்.கலையின் நற்பண்புகளை உணர்த்தும் ஒரு ஊடகமாக அவர் திரைப்படத்தை பார்த்தார். பத்தாண்டுகள் கடந்த பிறகேனும் அவரது முழுநீள திரைப்படம் ‘தூரத்து’ (தொலைவு) வங்கத் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதைத் தொடர்ந்து இந்திய சினிமாவின் சர்வதேச முன்னேற்ற வரலாற்றில் அவரது பங்களிப்பு இருந்தது.

விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து, தீமைகள் நிறைந்த சூழ்நிலை, பொருளாதார ஆய்வு மாணவரும் ஆசிரியருமான புத்ததேவின் படங்களில் கவிஞர் என்பதைக் கடந்து அதிக அலசலுக்கு உட்பட்டது. முதலில் அவரது படைப்புகள் ரேவைப் போலவே இருந்தன. ஆனால் பின்னர் அவரது மொழி ஆழமாகவும் தீவிரமாகவும் மாறியது. ரே மற்றும் சென்னைப் போலவே, புத்ததேவும் 1970 களில் கல்கத்தாவை சித்தரித்தார். ஒருவகையில் அவர்கள் இருவரையும் விட கூர்மையான மொழியிலும் பாணியிலும் மிகவும் ஆக்ரோஷமாக விளங்கினார். ‘கிரகயுத்தா’(உள்நாட்டுப் போர்) வில் பிஜான் ஒரு சராசரி மனிதர், அவரும் அவரது நண்பர் பிரபீரும் தீவிர தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பிரபீர் கொலை செய்யப்படுகிறார். ஆட்சியாளர்களின் துணையுடன் தொழில் அதிபர்கள் கொடிய வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். பிஜான் தனது நம்பிக்கைகளை கைவிட்டு சக ஊழியர்களுக்கு எதிராக நிற்கிறார். ஆனால் மனித வாழ்க்கைக்கான போராட்டம் அங்கு முடிந்துவிடவில்லை.

பிஜான், பிரபீரின் சகோதரி நிருபமாவை காதலித்து வந்தார். அவர் நிருபமாவுடன் திருமணத்தை முன்மொழிகிறார், முதலில் அவள் அதை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால், இவர் தான் முன்பு நேசித்த மனிதன் அல்ல என்பதை உணர்ந்து நிருபமா மனதை மாற்றிக்கொள்கிறார். போராட்டமும் வாழ்க்கையும் தொடர்கின்றன. பிஜான் தனிமைப்படுகிறார்.ஒரு பறவை விற்பனையாளரைப் பற்றி ஒரு நாடோடி கதையைச் சொல்லும்போது கூட, புத்ததேவ் வெளிப்படுத்துவது உலக வாழ்க்கையை அனுதாபத்துடன் அணுகும் சக்திகளின் பார்வை. ஒருவேளை இந்த திரைப்படக் கலைஞனின் பின்னணிக்கும் கதைக்களத்திற்கும் உள்ள வேறுபாடு கவிஞரின் முற்போக்கு பார்வை மட்டுமல்ல, தகவல் தொடர்புகளின் வெற்றியும் கூட என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புத்ததேவ் மலையாள பார்வையாளர்களுக்கு சத்யஜித் ரே மற்றும் மிருணாள் சென் போன்று பழக்கமானவர் - பிரியமானவர். பிலிம் சொசைட்டி திரையிடல்களுடன் தொடங்கிய இந்த உறவு 88 ஆவது திரைப்பட விழாவிலிருந்து கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்கள் மூலம் பலப்படுத்தப்பட்டது.1988 ஆம் ஆண்டின் சிறந்த மலையாள திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பததற்கான மாநில அரசின் திரைப்பட விருதுகள் நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்தார். 1988 திருவனந்தபுரம் திரைப்பட விழாவின் போது அவர் அளித்த பேட்டியில் சினிமாவுக்கும் கவிதைக்கும் இடையில் எந்த மோதலும் முரண்பாடும் இல்லை என்று, தான் உணர்ந்ததாக கூறினார்.

மாயகோவ்ஸ்கியின் வார்த்தைகளை நுட்பமாக மேற்கோள் காட்டி அவர் மேலும் கூறுகையில்: ‘‘நான் யோசனைகளைக் கொண்டு வர வேண்டும், படம் லட்சக்கணக்கானவர்களை ஈர்க்க வேண்டுமென்றால், சினிமாவில் எனது கவிதை திறமையை வெளிப்படுத்த வேண்டும்’’. இந்த திரைப்பட கலைஞரின் உண்மையான வார்த்தைகளை ஆராய்ந்தால், இந்த மேற்கோள் தற்செயலானது அல்ல என்பதைக் காண்போம்.புத்ததேவ் படத்தின் வசனங்களில் கவிதைகளின் ஆளுமையை காணலாம். இந்திய சினிமாவில் ரே மற்றும் சென் ஆகியோருடன் இவர் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றபோதிலும், வங்காள மொழியில் புத்ததேவின் கவிதைகள் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

கட்டுரையாளர் ; கோயா முகம்மது

தேசாபிமானியிலிருந்து தமிழில் சி.முருகேசன்...  

;