cinema

img

67-வது தேசிய திரைப்பட விருதுகள்: ரஜினி, தனுஷ், விஜய்சேதுபதிக்கு விருது

67-வது தேசிய திரைப்பட விருதுகள் 2019-ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்காக விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ்படம்- சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான பட்டியலில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது அசுரன் திரைப்படத்தில் நடித்த தனுஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.

போன்ஸ்லே திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகர் – நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதும், அஜீத் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்திற்காக இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளனர்.

 

ஜூரி சிறப்பு விருது- பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ஒத்த செருப்பு திரைப்பட்த்திற்கு சிறப்பு தேர்வுக்குழு விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல ஒத்த செருப்பு திரைப்படத்தின் ஒலிக்கலவை பணிகளுக்காக ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இதே விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் கலைசேவையை பாராட்டி தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில்  நடிகர் ரஜினிகாந்த்,பார்த்திபன், விஜய்சேதுபதி,தனுஷ், இசையமைப்பாளர் இமான் மற்றும் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்.

 

;