cinema

img

பா. இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு 

சென்னை, ஜன.22-
பா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குனர் பா. இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'பொம்மை நாயகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கின்றார். 
இயக்குனராக ஷான், இசையமைப்பாளராக சுந்தர மூர்த்தி, ஒளிப்பதிவாளராக அதிசயராஜ், எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன. 22) முதல் தொடங்கப்பட்டுள்ளதாக பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

;