cinema

img

’என்னங்க சார் உங்க சட்டம்’ வெளியிடு தேதி அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகும் ;என்னங்க சார் உங்க சட்டம் படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ். கார்த்தி நடித்துள்ள படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு படங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் சில படங்கள் போதிய திரையரங்குகள் கிடைக்காமல் திணறியும் வருகிறது.

இந்நிலையில், ’என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படக்குழுவினர் ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்துள்ளனர்.

சோனி லைவ் நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டுத் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. தற்போது அக்டோபர் 29-ஆம் தேதி ‘ என்னங்க சார் உங்க சட்டம்’ வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ சோனி லைவ் நிறுவனம் அறிவித்துள்ளது.

;