cinema

img

வலிமை அப்டேட் : இன்று மாலை வெளியாகும் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் 

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது,

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று நிலையில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று வலிமை வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

விரைவில் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் (முன்னோட்ட வீடியோ) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த வீடியோவில் அஜித்தின் சண்டைக்காட்சிகள் மட்டுமே முழுக்க முழுக்க இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

இதனைத் தொடர்ந்து #ValimaiGlimpse என்ற ஹேஷ்டேக்கிலும் வலிமை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

;