cinema

img

வலிமை அப்டேட் : வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் 2022 பொங்கலுக்கு திரையரங்கங்களில் வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். 

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று நிலையில், வலிமை திரைப்படம் தீபாவளி வெளியீடு, கிறிஸ்துமஸ் வெளியீடு என்று பல்வேறு வெளியீட்டுத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனிடையே வலிமை படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் போனி கயூர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வலிமை திரைக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

வலிமை திரைப்படம் வெளியாகும் தேதி வெளியானதால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  நடிகர் விஜயின் பீஸ்ட் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வலிமை பற்றிய அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 

;