cinema

img

விடாது முயலும் வடிவேலு...

வடிவேலு நடிப்பில் உருவாக இருக்கிறது இன்னொரு படம். பெயர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இப்படியொரு பெயரில் மீண்டும் பழைய முத்திரையைப் பதிக்கிற முயற்சியோடு வருகிறார் வடிவேலு. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகிற இந்தப் படத்தில் வடிவேலு ஒரு பாடலைப் பாடியிருக்கிறாராம். அதனைக் காட்சிப்படுத்துதல் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பிரபல நடின நடிகர் பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அவர் வடிவேலுவுக்கு நடனம் சொல்லித்தரப்போகிறார் போலும்.  பிரபுதேவாவும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறாராம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைகிறார்கள் என்பது எல்லோராலும் மகிழ்ச்சியாகப் பேசப்படுகிறதாக உள்ளது. அண்மையில்தான் நாய் சேகர் என்றொரு படம் சதீஷ் நடித்து வெளிவந்தது. இப்போது உடனே மறுபடியும் அந்தப் பெயரில் இன்னொரு படமா என்று நினைத்தால், நாய் சேகர் டைட்டிலுக்கு காப்புரிமை நியாயப்படி வடிவேலுவுடையதுதானே? அதுசரி.