cinema

img

இதுதான் தனுஷின் இலட்சியமாம்...

இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராம், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் போன்றவர்களின் படங்களில் தற்போது நடித்துவரும் நடிகர் தனுஷ் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் முழுநேர இயக்குநராகிவிட வேண்டும் என்ற விருப்பதில் இருக்கிறார். இதுவே தனது ஆசை என்றும் அவர் கூறியுள்ளார். ராஜ்கிரன், ரேவதி நடிப்பில் ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கிய அனுபவம் அவருக்கு ஏற்கெனவே உண்டு என்பது அறிந்ததுதான். தனது முதல் தேர்வு சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும் அவரை வைத்து ஒரு படத்தைக் கண்டிப்பாக இயக்குவேன் என்றும் தனுஷ்  கூறியிருக்கிறார். கோலிவுட் தொடங்கி, ஹாலிவுட் வரையில் தனது நடிப்புத் திறத்தால் உயர்ந்து நிற்கும் தனுஷ் தற்போது ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் த கிரேட் மேன் எனும் ஹாலிவுட் (ஆங்கில) படத்திலும் நடித்துவருகிறார்.  அமெரிக்காவில் நான்கு மாத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஹாலிவுட் படம் ஒன்றின் முழுநீளப் பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர் எனும் பெருமையை இதன்மூலம் தனுஷ் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

;