cinema

img

ஜெய் பீம் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில், நடிகர் சூர்யா வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

;