cinema

img

கர்ணன் படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு

கர்ணன் படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இத்திரைப்படம் கர்ணன். 
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெறும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ எனும் பாடல் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் கர்ணன் படத்தின் 2-வது பாடல் நாளை (மார்ச் 2) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

;