cinema

img

ஆஸ்கர் போட்டிக்கான தகுதிப் பட்டியலில் சூரரைப்போற்று

சூரரைப் போற்று திரைப்படம்  ஆஸ்கர் சிறந்த படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.
இத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு சூரரைப் போற்று' திரைப்படம்  தேர்வானது.
இந்நிலையில், 366 படங்கள் கொண்ட சிறந்த படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 
ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சூரரைப் போற்று திரைப்படம் அடுத்ததாகப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற வேண்டும். அப்பட்டியலில் இடம்பெற்றால் மட்டுமே ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாக முடியும்.

மேலும், மார்ச் 15 அன்று இறுதிக்கட்டப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படும். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா 2021 ஏப்ரல் 25 அன்று நடைபெறவுள்ளது.

;