cinema

img

திடீர் உடல்நலக் குறைவு... தீவிர சிகிச்சைப் பிரிவில் மன்சூர் அலிகான்.....

சென்னை:
உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகர்களில் ஒருவராக மாறினார். அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார்.

சில படங்களில் நாயகனாகவும் நடித்துள் ளார். பல படங்களைத் தயாரித்து இயக்கவும் செய்துள்ளார்.நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 41 வாக்குகளே கிடைத்தன.இந்நிலையில் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மரு‌த்துவமனை யில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிறுநீரகக் கல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்ததால் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

;