cinema

img

ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'

ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு 'சூரரைப் போற்று' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.
இத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது.
ஆன்லைன் ஸ்கிரீன் ரூமில் நடைபெறவுள்ள இந்த திரையிடலை உலகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் பார்வையிடுவார்கள். அதற்காக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழில் இருந்து இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா நோய் தொற்று காரணமாக இந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா, ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

;