cinema

img

சார்பட்டாவைத் தொடர்ந்து... அரண்மனை 3... எனிமி....

பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் தற்போது  சமூக - அரசியல் களத்தில் பேசப்படுகிறதாக உள்ளது. ஓடிடி-யில் இந்தப் படமும் டெடியும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிற நிலையில், படத்தின் நாயகன் ஆர்யா. படத்தோடு அவரது பெயரும் உயரத்திற்குப் போகிற சூழலில், அவர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் மற்ற படங்களான அரண்மனை 3, எனிமி போன்ற படங்களையும் வேகவேகமாக வெளியிடும் முயற்சியில் அந்தப் படங்களின் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்களாம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது இதுதானோ? 

;