cinema

img

இன்னொருமுறை அந்த மூவர் கூட்டணி...

கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் - சிம்பு மூவரும் இணைந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப்பிறகு வெந்து தணிந்தது காடு படம்தான் இப்போது அவர்களை மீண்டும் இணைத்துள்ளது. ஐசரி கணேசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் நாயகி சித்தி இதானி. ஜெய மோகனின் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்  கதையை அடிப்படையாக வைத்துத்தான் இந்த வெந்து தணிந்தது காடு உருவாக்கப் பட்டுள்ளதாம். ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீடு ஜூன் மாதம் இருக்கும் என்கிறார்கள். இதன் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள்.