cinema

img

புதிய இயக்குநர்கள் சாதி அடையாளங்களை முன்னிறுத்துகிறார்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கும் புதிய படம் ‘இறைவன் மிகப் பெரியவன்’. வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதும் இப்படத்தை அமீர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார். இதனை அமீர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைத்து வருகின்றனர். இன்றைக்கு புதிதாக திரைத்துறைக்கு  வருபவர்கள் தங்கள் படங்களில் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்து கிறார்கள். இது மோசமான விஷயமாக இருக்கிறது. இந்தப்படம் அனைத்து மதங்களுக்கும் இடையே இருக்கும் அழகான உறவைதான் சொல்லப் போகிறது. நீங்கள் பார்க்காத புதிய விஷயங்கள் எதையும்  நான் சொல்லப்போவதில்லை. நீங்கள் பார்த்த  நினைவுகளை தான் இந்தப்படம் சொல்லும். ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாகச் சொல்லும் என்று கூறியுள்ளார் அமீர்.