cinema

img

அதிகம் பேர் பார்த்த படம்...

சத்யன் மாஸ்டர் வாழ்க்கை திரைப்படமாகிற செய்தியைப் பார்த்தோம். தமிழில் 2021 ல் வெளிவந்த படங்களில் அதிக ரசிகர்கள் பார்த்த படமாக மாஸ்டர் முதலிடத்தில் இருப்பதாக திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி தெரிவித்துள்ளது. இந்திய அளவில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதம் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் முதலிடம் பிடித்துள்ளது. அதையடுத்து ஆஸ்பிரன்ட் எனும் வெப் தொடர் இரண்டாமிடத்தையும், பிரயங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த தி ஒயிட் டைகர் திரைப்படம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் - 2 நான்காமிடத்தைப் பெற்றுள்ளதாம். 

;