cinema

img

யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் ‘மண்டேலா திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

மடோன் அஸ்வீன் இயக்கத்தில் யோகிபாபு-ஷீலா ராஜ்குமார் நடித்த மண்டேலா திரைப்படம் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது.

இந்நிலையில், மண்டேலா ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சினிமாத்துறையினருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் விருது உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து 14 படங்கள் தேர்வாகியுள்ளன.

அதில், தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் ’மண்டேலா’ என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த ‘ நாயட்டு’ படமும், வித்யா பாலனின் ஷெர்னி படமும் பரிந்துரைப் பட்டியலில் உள்ளன. இந்தப் 14 படங்களில் ஒரு படத்தை தேர்வு செய்து ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்புவார்கள். இதற்கான, திரையிடல் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

;