cinema

img

வெளியானது லைகர் படத்தின் டிரைலர்!

விஜய் தேவர்கொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

'தர்மா புரொடக்ஷன்' தயாரிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 
உருவாகியுள்ள படம் 'லைகர்'.
விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மும்பையில் குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவர்கொண்டா சர்வதேச அளவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார். ஒரு சாதாரண இடத்தில் இருந்து இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பதை சொல்லியிருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது