cinema

img

இது ஜனநாயகமா... பைத்தியக்காரத்தனமா? மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடிகை ஓவியா மீண்டும் டுவீட்....

புதுதில்லி:
இயக்குநர் சற்குணம் மூலம் ‘களவாணி’ திரைப்படத்தில் அறிமுகமாகி, மெரினா, மூடர் கூடம், மதயானைக் கூட்டம், கலகலப்பு உட்பட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தவர் ஓவியா. எனினும், 2017-இல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டபோது, அவரிடம் வெளிப்பட்ட நேர்மை மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள், மக்களை வெகுவாக கவர்ந்தது. ‘ஓவியா ஆர்மி’என்ற பெயரில் ஒரு பெரும் பட்டாளமேஅவருக்கு ஆதரவாக திரண்டது.பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடுவரும்போதெல்லாம் அவருக்கு எதிராக ‘கோ பேக் மோடி’ (#GoBackModi)என்ற ஹாஷ்டேக் டிரண்டாவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021 பிப்ரவரியில் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, தமிழக மக்களுடன் சேர்ந்து, ஓவியாவும் ‘மோடியே திரும்பிப் போ..!’ (#GoBackModi) என்று டுவிட்டரில் பதிவிட அது பெரும் வைரலானது.ஓவியாவின் இந்த டுவீட்டிற்கு 61 ஆயிரம் லைக்குகளும் 20 ஆயிரம் ரீ-டுவீட் களும், 6 ஆயிரம் கமெண்ட்டுகளும் குவிந்தன.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், ஓவியா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றுகூறி காவல்துறைக்கு ஓடினர்.ஆனால், ‘சிந்திப்பதற்கான தனதுசுதந்திரத்தை யாரும் தடுக்க முடியாது’ என்று பொருள்படும் வகையில்,ஜெய்ஹிந்த் (#jaihind) என்றும் ‘ப்ரீடம் ஆப் தாட்’ (#freedomofthought) எனஇரு ஹேஷ்டேக்குகளை அவர் பதிவிட்டு, பாஜகவினருக்கு பதிலடி கொடுத்தார்.இந்நிலையில்தான், தற்போது ‘இது ஜனநாயகமா... அல்லது பைத்தியக்காரத்தனமா?’ (Is this democracyor democrazy???) என டுவிட்டரில் கேள்வி எழுப்பி, மீண்டும் பாஜகவினரை கலங்கடித்துள்ளார். 

தடுப்பூசி செலுத்துவதில் மோடி அரசு காட்டும் அலட்சியத்தைக் கண்டித்து தில்லியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்காக 19 வயது முதல் 61 வரையிலான தினக்கூலித் தொழிலாளர்கள், அச்சக ஊழியர்கள், ஓட்டுநர்கள் என 25 பேரை தில்லி காவல்துறை கைது செய்தது. இதனைக் கண் டிக்கும் விதமாகவே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ள ஓவியா, ‘என்னையும் கைது செய்யுங்கள்’ என்று ஹாஷ் டாக் (#ArrestMeToo) ஒன்றையும் இணைத்துள்ளார்.

;