cinema

img

சர்வதேச விருது வென்ற கூழாங்கல் திரைப்படம்

வினோத் ராஜ் இயக்கியுள்ள கூழாங்கல் திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் கூழாங்கல். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம், ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்றுள்ளது.

இதுகுறித்து, ரோட்டர்டாம் விருது குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த எளிமையான படம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படத்தை பார்த்ததுமே எங்களுக்கு பிடித்து விட்டது. குறைந்தபட்ச எளிமையுடன் அதிகபட்ச தாக்கத்தை உருவாக்கி, படத்தின் இயக்குநர் தனது முக்கிய கதாபாத்திரங்களின் அதே நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தனது இலக்கை அடைகிறார். கடுமையான கதைக்கு மத்தியிலும் அழகிய நகைச்சுவையுடன் நம்மை கவர்ந்திழுக்கிறது. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டைகர் விருது வெல்லும் முதல் தமிழ் திரைப்படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

;