cinema

img

ஆன்டி இண்டியனுக்கு வெற்றி வரட்டும்...

புளு சட்டை மாறன் தமிழ்த் திரைப்படங்களை விமரிசனம் என்ற பெயரில் கொஞ்சம் ஓவராகவே கிழிகிழியென்று கிழித்துத் தொங்கவிடு பவர். இவரது யூடியூப் சேனல் இப்படி யான கடும் விமரிசன பாணிக்காகவே பிரபலம். விமரிசிக்கப்படுகிற படங்க ளில் பங்களிப்பு செய்து அவற்றை உரு வாக்கியவர்களின் கோபங்களைச் சம் பாதித்தவர் என்கிற பெயருடன் பார்க்கப் பட்ட இவர், இளமாறன் என்ற பெயரில் இயக்கியிருக்கும் படம்தான் ஆன்டி இண்டியன்.  படத்தின் பெயரைக் கேட்கிற மாத்தி ரமே அது என்னமாதிரியான படமாக இருக்கக்கூடும் என்று யூகிக்க முடிகிற தல்லவா? அவரும் கடுமையான முயற்சி களுடன்தான் இந்தப் படத்தை உரு வாக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆதம் பாவா தயாரிப்பில் வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், பசி சத்யா போன் றோரின் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட தொரு படமாக இது இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகளோடு வெளிவரப்போகி றது இந்த ஆன்டி இண்டியன்.  இந்தப் படம் பற்றி இயக்குநர் பாரதி ராஜா இளமாறனிடம் இப்படிச் சொன்ன தாகவும் செய்திகள் உலவுகின்றன: “டேய்... உன் படம் முடிஞ்சிருச்சினு கேள்விப்பட்டேன். படம் வரட்டும். நானும் ஒரு புளு சட்டையை மாட்டிக் கிட்டு உன் படத்தை என்ன பண்றேன் பாரு!”- என்றாராம்.  இது சும்மா தமாசுக்குச் சொன்ன தாகத்தான் சொல்லப்படுகிறது.

;