cinema

img

ஜெய் பீம் திரைப்படம் ஒரு மீள்பார்வை - பெ. சிதம்பரநாதன்

ஜெய் பீம் திரைப்படம் & ஒரு காலத்தில் பாறைகளைப் பிளக்கக் கையாண்ட கதணையைப் போல வெடித்துள்ளது. தீஜெய் பீம்பீ என்றால் இருளை ஜெயித்து ஒளிக்குள் போவதாகும். இப்பெயரைச் சமூக முழக்கமாகச் செய்ய வேண்டுமே தவிர, வர்த்தகமயமான ஒரு  சினிமாவுக்குச் சூட்டியிருக்கக் கூடாது என்றும், மத்திய அரசு இதனைத் தடைசெய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்திருப்பவர், குரலற்ற சமூகத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்தான். அதேசமயம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இப்படத்தை எதார்த்தமாகப் பார்த்தாலே போதும், இப்படத்தின் செய்தியை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும் என்று பாராட்டியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவ உயர்கல்விப் படித்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், ஏனோ இத்திரைப்படம் வன்னியர்களை இழிவுபடுத்தியுள்ளது என நடிகர் சூர்யாவுக்குக் கடிதம் எழுதிக் கண்டனம் செய்திருக்கிறார். இதனால் அடுத்த நகர்வாக, சூர்யாவை எட்டி உதைத்தாலே போதும் ரூ. 1 லட்சம் பரிசுத் தரப்படும் என்ற அறிவிப்பு களும் வெளியாயின. ஒருவேளை இப்படம் திரையரங்குகளில் காட்டப்பட்டிருக்குமா னால், அந்த அரங்குகள் கொளுத்தப்பட்டி ருக்கலாம் என்று அச்சப்பட வேண்டியுள்ளது. இப்படம் தீபிரைம் டைம்பீ நிறுவனத்தின் சார்பாக கட்டணம் செலுத்திக் காணுகிற தொலைக்காட்சிப் படமாக மட்டுமே இருப்பதால், கொளுத்துவதற்கான சந்தர்ப்பம் தூண்டிவிடப்பட்டவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இப்படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற  1995&ஆம் ஆண்டு என அச்சிடப்பட்டுள்ள காலண்டர்,

இக்கதையின் கால அடையாளத் தைக் காட்டுவதற்காக மாட்டப்பட்டுள்ளது. சர்ச்சை காலண்டர் அல்ல; காலண்டரில் உள்ள தீஅக்னிச்சட்டிபீதான்.  அந்த அக்னிச் சட்டி இப் படத்தையே தீக்கிரையாக்க பற்றி எரிகிறது. காரணம், அது வன்னியர் சமூகத் தாரின் சாதிய அடையாளம் எனப் பேசப்படுகிறது. வன்னியர் பெரும் பான்மையாக உள்ள ஊர் களில் மாரியம்மன் பண்டி கையில் ஊர்மக்கள் அக்னிச் சட்டியை ஏந்திச் செல் வது வழக்கம். அந்த அக்னிச்சட்டி வன்னியர் களுக்கு மட்டுமே உள்ள அடையாளமா?

கொங்கு வட்டாரத்தில் அக்னிச்சட்டி யைப் தீபூவோடுபீ என்று நளினமாகக் கூறு வார்கள். இவ்வட்டார மக்கள் மாரியமச்மன் கோவிலுக்குப் பூவோட்டைக் கைகளில் ஏந்திச் செல்வது வழக்கம். இந்தச் செய்தி வன்னியர்களுக்குத் தெரியாதது போல உள்ளது.  சர்ச்சைக்குரிய இந்தக் காலண்டரைத் திரைப்படத் துறையினர் ஆட்சேபனை செய்யப்பட்ட அடுத்த நாளிலேயே வெட்டிவிட்டனர். அதே இடத்தில் அருள்மிகு மகாலட்சுமி காலண்டரை மாட்டினர். காரணம், கதையின் காலத்தைக் காட்ட 1995&ஆம் ஆண்டு காலண்டர் படம் திரைப்படத்திற்கு அவசியப்படுகிறது. அடுத்தது, சப்&இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியின் மெய்யான பெயர் அந்தோணி சாமி. அதனை குருமூர்த்தி என்று மாற்றியதில், குரு என்பது பா.ம.க.&வின் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவைக்  காட்டுவதற்கான உத்தியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

குருமூர்த்தியைத் தீதிருமூர்த்திபீ என்று வைத்திருந்தாலும், வேறு ஏதேனும் ஒன்றைக் குறையாகக் காட்டி பிரச்சினை செய்யவே முயற்சி செய்திருப்பார்கள் என்று நினைக்க வேண்டியுள்ளது.  அதற்கு ஓர் உதாரணம். கம்மாபுரம் பேரூராட்சியின் முதனைக் கிராமவாசியான தோழர் கோவிந்தன் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தான் இந்த வழக்கை நீண்ட காலமாக நடத்தி வந்தவர். அவருக்குக் கட்சியின் ஆதரவு இருந்த காரணத்தாலும், அவரே வன்னியர் சாதியினர் என்பதாலும் காவல்துறை அவரை மிரட்ட முடியாமல் போய்விட்டது.

அந்த வன்னிய பாத்திரத்தைக் கதாநாய கரை போல உயர்த்திக் காட்டாமல், பின்னுக்குத் தள்ளி மங்கங்கச் செய்துவிட்டது ஏன் என்ற இவர்கள் கேள்வி சரியானதா? யாரை கதாநாயகனாக்க வேண்டும் என்பது பட இயக்குநரின் முடிவே தவிர,  இவர்களுடைய விருப்பத்தைக் கேட்பதே இது வன்னியர்களை மனதில் நினைத்து செய்வதுபோல் ஆகிவிடாதா? அதனால்தான் பட இயக்குநர் யார்த்தமாக வைத்த பெயராக அது உள்ளது.      இங்கே முக்கியமான விஷயத்தை நாம் சற்று அசைபோட்டுப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் சத்ரிய குல வன்னியர்கள்தான் பெரும்பான்மை சாதியினர் என்பதில் சந்தேகமில்லை. பிறச் சாதியினரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். 8 கோடி தமிழர் களில் 2 கோடிக்கும் அதிகமாய் இவர்கள் உள்ளதாகக் கூறப்படுவது மிகையல்ல.  இவர்களுக்கு இணையாக கொங்கு வேளாளக் கவுண்டமார் சாதியினர் ஒருவேளை இருக்கலாம். இதேபோல தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் இருக்கலாம்.

இந்த மூன்று முக்கிய சாதியினர்களி லிருந்தும் தமிழகத்தின் முதலமைச்சராகச் சென்ற 70 ஆண்டுகளில் ஒருவர்கூட வரவில்லை.  ஏதோ தற்செயலாகவோ, அதிர்ஷ்டவச மாகவோ சென்ற அதிமுக ஆட்சியில் மிச்ச முள்ள 4 ஆண்டுகளுக்கு முதலமைச்சராக கொங்குவேளாளர் எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டாவரே தவிர, தேர்தலில் முதலமைச்சராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இம்மூன்று முக்கிய சமூகத்திலிருந்தும் மத்திய & மாநில மந்திரிகள் இருந்துள்ளனரே தவிர, தமிழக முதலமைச்சராக யாரும் வரவில்லை. மறைந்த திரு. பிரகாசம், திரு. ஓமந்தூர் ரெட்டியார், திரு. குமாரசாமி ராஜா, ராஜாஜி, பக்தவத்சலம், காமராஜர், அண்ணாதுரை, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய அனைவருமே சிறுபான்மைச் சாதியினர்கள்தான். இதனை மனதில் கொண்ட மருத்துவர் ராமதாஸ், எண்ணிக்கையில் அதிகமாக உள்ள வன்னியர் சாதியிலிருந்து ஒரு முதல மைச்சர் வரவில்லையே என்று அவர் ஆதங்கப் படுவதாகத் தோன்றுகிறது. அதனால்தான் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தமது மகன் அன்புமணி ராமதாஸை முதலமைச்சராக்க வேண்டுமென்று பலமுறை அறிவித்துள்ளது அப்படி ஒன்றும் ரகசியமானதல்ல. 

இந்தப் பின்புலத்தில் வெளியாகியுள்ள தீஜெய் பீம்பீ திரைப்படமானது, ஒருவேளை வன்னிய சாதியினுடைய முதலமைச்சர் ஆசையைப் பலவீனப்படுத்திவிடுமோ என்கிற இனம்புரியாத பயத்தில் படத்தில் இப்படிப்பட்டக் குறைபாடுகளைக் கடும்முயற்சி செய்து கண்டுபிடித்துப் பேசுகிறார்கள் என்றால் அது தவறு அல்ல.     பெரும்பான்மை எண் ணிக்கையுள்ள வன்னியர் சமூகத்திலிருந்து துடிப்பு மிக்க & மருத்துவம் படித்த & தமிழ்ப் பண்பாட்டாளராகத் திகழ்கிற ஒருவர் முதலமைச்சராக வருவது வரவேற்கத் தக்கதுதான்.  பொருளாதார ரீதியில் வன்னியர் சமூகத்தினரில் பெரும்பாலோர் தினக் கூலிகளாகவும், அன்றாடம் காய்ச்சிகளாகவும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. அதன் காரணமாகத்தான், அவர்கள் மிகவும் பின்தங்கிய பிரிவினராக அறிவிக்கப்பட்டனர் என்பதை காண வேண்டும். வன்னியர்களில் சிலர் வசதியான செல்வந்தர்களாகவும் உள்ளனர் என்பதும் உண்மைதான். 

இந்திய அரசியலில் ஜனநாயகத்தின் பேரில் அதற்கு முரணான ஒரு தீய அம்சத்தின் ஊடுருவல் நிகழ்ந்து கொண்டி ருப்பதை நாம் பார்க்கத் தவறக் கூடாது. அகில இந்திய மட்டத்திலும் சரி, மாநில  அளவிலும் சரி இந்தத் தீயப் போக்குத் தென்படுகிறது. அகில இந்திய அளவில் வாரிசு அரசியல் பகிரங்கமாகப் பேசப்படு கிறது. அதனால் குடும்ப ஆட்சி தொடர்கிறது. கட்சியும் குடும்பக் கட்சியாக இருக்குமாறு பாதுகாக்கப்படுகிறது. ஒரு கட்சியின் 23 தலைவர்கள் தலைமையை எதிர்த்து விமர்சனம் செய்து எழுதிய பிறகும்கூட, எதிர்பார்த்த மாற்றம் நிகழவில்லை. இது  எதைக் காட்டுகிறது? குடும்பக் கட்சி குடும்ப  ஆட்சி என்பவற்றைத் தானே. இதே நிலைமைதான் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் சம்பவித்துக் கொண்டிருக் கின்றன. பீகார், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு எனப் பல மாநிலங்களைச் சொல்லலாம். 

இந்தத் தவறான போக்கை தடுத்து நிறுத்தியாக வேண்டும். தீவன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லைபீ என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட வன்னியர்கள் மத்தியிலும் அவர்களுடைய அரசியல் கட்சி குடும்பக் கட்சியாகவும், அதன்மூலம் குடும்ப ஆட்சியை உருவாக்குவதற்குமான முயற்சியை நாம் பார்க்கத் தவறக் கூடாது.  வாரிசில்லாத ஆட்சிதான் இந்திய ஜனநாயகத்திற்குச் சரியானதாக இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. வாக்கு வங்கி அரசியல் கலைக்கப்பட வேண்டியதும் ஜனநாயகத்திற்கு அவசியம். வாரிசு அரசியல் இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு மேல், மேற்குவங்காளத்தில் ஜோதி பாசு ஆட்சி  நீடித்தது உண்மை. ஒரு திரைப்படத்தை எதார்த்தமாகப் பார்க் ்காமல் உள்நோக்கத்தோடு பார்த்துவிட்டு, பாம்பாகச் சீறிப் படமெடுப்பதும், தேளாக மாறிக் கொட்டுவதும் நியாயமல்ல. கலாருசியோடு செய்யப்பட்ட பதார்த்தத்தில் உண்மை என்பது உப்புப் போலத்தான் கலந்திருக்கிறது. நிஜமாகவே நிகழ்ந்த ஒரு சம்பவத்தை புனைவுகளோடு கலாருசியாக்கி இயக்குநர் ஞானவேல் தமிழ் மக்களுக்குத் தந்துள்ளதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஜெய்பீம் படத்தின் கதாநாயகன் யார்? 

காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப் பட்ட அப்பாவி ராஜ்கண்ணு அல்ல. 21 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி அடித்துக் கொல்லப்பட்ட வழக்குக்கான சாட்சிக்கு சாம்பல்கூட கிடைக்காத நிலையில், அதனை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த அன்றைய வழக்குரைஞர் சந்துருதான் கதாநாயகன் & ஜெய்பீம் படத்தில் சூர்யா.  இதனை மறந்துவிட்டு அந்தப் படத்தைப் பார்ப்பது கலைக்கு செய்கிற துரோகம். காவல்துறையில் தலைகாட்டுகிற அன்றைக்கும் இன்றைக்குமானக் கொடூர மனப்போக்கைச் சித்தரித்துக் காட்டி அத்தகைய அகோரமனிதர்கள் மீண்டும் மீண்டும் காவல்துறையில் உருவாகாமல் தடுப்பதற்கான உன்னத முயற்சியாகப் பார்க்கப்பட வேண்டிய இப்படத்தில், சாதி யைத் தேடோ தேடென்று தேடித் தேடி நீதியை  நிலை தடுமாறச் செய்வது நியாயமாகுமா?

யார் கண்ணில் உறுத்துகிறது அந்தக் காலண்டர்? யாருக்கும் தெரியும் குரு மூர்த்தியின் நதிமூலம்? சாதிய சிமிழுக்குள் ஜெய்பீம் சமுத்தி ரத்தை அடைப்பது சாத்தியமாகுமா? காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட சித்ர வதைக்கு குருமூர்த்தியே காரணம் என்பதை மட்டுமே காட்டி, காவல்துறையே இனி வேண்டாம் என்று சொல்லவா இப்படம் நம்மை தூண்டுகிறது?   அதே காவல்துறையில் ஐ.ஜி. தகுதியுள்ள பெருமாள்சாமி என்பவர் மனச்சாட்சியுள்ள மகத்தான பாத்திரமாக்கப்பட்டுள்ளது இவர்கள் கண்களுக்கு ஏன் படவில்லை? அவருடைய வாய்மொழி சாட்சியாலும், அறிக்கையாலும்தானே, நீதியின் வெளிச்சம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குடிசைகளுக்குள் படர்கிறது. காவல்துறையின் களங்கமே அதனால் துடைக்கவும் படுகிறதே. அதனை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க மறுக்கலாமா? 

 

;