திங்கள், மார்ச் 1, 2021

cinema

img

எங்களுக்கு ஒன்றும் தெரியாதா... சரி, நீங்கள் வந்து விளக்குங்கள்.... நடிகை ஹேமமாலினிக்கு விவசாயிகள் அழைப்பு....

ஜலந்தர்:
வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி, அண்மையில் விமர் சித்து இருந்தார். “யாரோ சிலரின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்” என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. விவசாயிகளுக்குத் தெரியாதது, ஹேம மாலினிக்குத் தெரிந்துவிட்டதா? ஹேம மாலினி அவ்வளவு பெரிய விவசாயியா?என்று சமூகவலைதளங் களில் பலர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.இந்நிலையில், விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான பூபிந்தர் சிங் கும்மானும், நேரடியாகவே நடிகை ஹேம மாலினிக்கு கடிதம் ஒன்றை எழுதி, விவசாயிகளின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“உங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் பஞ்சாப்மைத்துனர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது பஞ்சாப் மக்களுக்கு ஒரு தாயாக இருப்பதற்குச் சமம். இந்த நிலையில்,விவசாயிகள் போராட்டம் குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்து அனைத்து பஞ்சாபிகளையும் காயப்படுத்தியுள்ளது. தலைநகர் தில்லியில் எங்கள் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே நாங்கள் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகிறோம். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரை இழந் துள்ளோம். ஆனால், விவசாயிகளுக்கு இந்தச் சட்டம் பற்றிஒன்றும் தெரியாது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள்எங்கள் பஞ்சாப் மாநிலத் திற்கு வாருங்கள். உங்களுக் கான போக்குவரத்துச் செலவு, இங்கு நீங்கள் தங்கும் 5 ஸ்டார் ஹோட்டலுக்கான செலவு என அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நீங் கள் வேளாண் சட்டங்களால் எங்களுக்கு என்ன நன்மை?என்பதை மட்டும் தயவு செய்துவிளக்குங்கள்” இவ்வாறு பூபிந்தர் சிங் கூறியுள்ளார்.

;