சென்னையில் இன்று (11-11-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.47,600-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை, ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.