articles

img

அது வெறும் நாய்கள் மட்டுமல்ல!

ஆகஸ்ட் 9 உலகம் முழுவதும் நாய்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. நாய்கள் குறித்து பலருக்கும் பல கருத்துக்கள் உள்ளது. சிலர் நாய்களை தன் வீட்டில் ஒருவராகவே பாசத்தோடு வளர்ப்பார்கள்.சிலர் நாயை கண்டாலே பயம் கொள்வது என ஒவ்வொருவரும் ஒருவிதம் .

இந்த நாய்கள் வெறும் நாய்கள் மட்டுதானா? ஆதிகாலம் தொட்டே மனிதனோடு நாய்கள் நெருங்கி பழகி வருகிறது. வேட்டையாடி வாழ்ந்து வந்த ஆதி மனிதர்கள் பிற விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாய்களையே பயன்படுத்தி இருக்கின்றனர். ஆதிகாலத்தில் இருந்தே மனிதனோடு பழகி வந்ததால் என்னவோ மனிதனின் குணத்தை நாய்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றன.  நீங்கள் கையில் ஒரு கல்லை எடுங்கள் நாய் உடனே தெரித்து ஓடும் ஏனென்றால் நீங்கள் அதை தாக்குவீர்கள் என்பதை அறிந்து வைத்துள்ளது. மற்ற விலங்குகள் அவ்வாறு ஓடுவது கிடையாது.  

ஒரு விலங்குக்கு நாடே மரியாதை செய்த சம்பவத்தைக் கூறித்தான் ஆக வேண்டும்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஈஸாபூரோ என்ற செல்வந்தர் ஒரு நாய் வளர்த்தார்.அதற்கு பெயர் ஹச்சிகோ. ஈஸாபூரோ தினமும் டோக்கியோ ரயில் நிலையத்திற்கு வந்து ரயில் ஏறி தனது பணியிடத்திற்கு செல்வார்.

 அவரது நாயும் தினமும் காலையில் அவருடன் ரயில் நிலையத்துக்கு வந்து வழியனுப்பும்.மாலையில் அவர் பணி முடிந்து வரும் போது ரயில் நிலையம் வந்து அவரை அழைத்துச் செல்லும். ஒரு நாள் அவர் ரயிலில் வந்துகொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மாண்டு போனார்.

இது அந்த நாய்க்கு தெரியாது.அதனால் அந்த நாய் தனது எஜமானுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தது.தனது எஜமான் வராத்தால் ஏமாற்றத்துடன் திரும்பியது.மீண்டும் மறுநாள் மாலை வந்து காத்திருந்தது. அப்போதும் அவர் வரவில்லை.ஆனாலும் அது காத்திருந்தது. இப்படி ஒரு நாள் இரு நாள் அல்ல பத்து வருடங்கள் தினமும் ரயில் நிலையத்திற்கு வந்து காத்திருந்தது.அந்த அன்பான நாய். வயது முதிர்வால் ஒரு நாள் இறந்து போனது.அந்த நாயின் விசுவாசத்தை அறிந்த ஜப்பான் அரசு, டோக்கியோ ரயில் நிலையத்தில் அந்த நாய்க்கு சிலை அமைத்து அதன் விசுவாசத்தை போற்றியது.  

மேலும் தற்போது,  பராமரிப்பாளர் இன்றி சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே ஆதாரவற்று சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தக்க  முயற்சி எடுத்திட வேண்டும். இந்த பூமியில் ஒவ்வொரு உயிரினங்களும் வாழ்வதற்கு உரிமை உள்ளது. அதுபோலவே நாய்களுக்கும். நாய்களை பாதுகாப்போம்! ஏனென்றால் அது வெறும் நாய் மட்டுமல்ல..

;