articles

img

சே- வரலாற்றுச் சுவடுகள் - சூர்யா சேவியர்

1928- ஜூன் 14 எர்னெஸ்டோ சேகுவேரா பிறக்கிறார்

1945-மருத்துவப் படிப்பை மேற்கொள்கிறார்.

1950-மோட்டார் சைக்கிளில் மூவாயிரம் மைல் தூரம் வடக்கு அர்ஜெண்டினா முழுவதையும் சுற்றி வரும் பயணத்தை தொடங்குகிறார்

1952-தனது நண்பர் அல்பெர்த்தோ கிரானடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்கிறார். பெருவில் தொழுநோயாளிகளுக்கு பணிபுரிகிறார்கள்.

1953-ஜூன் 12 மருத்துவராகப் பட்டம் பெறுகிறார்.

1953-ஜூலை 6 லத்தீன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறார்

1955- தோழர்.பிடல்காஸ்ட்ரோவை சந்திக்கிறார். கொரில்லாப் போராளிகளுக்கு பயிற்சி கொடுப்பவர்களுக்கு மருத்துவராக இணைந்து போராளியாகிறார். இங்கு தான் அவர் "சே" என அழைக்கப்படுவது தொடங்குகிறது.

1955-ஆகஸ்ட் 18 குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச் சேர்ந்த, தீவிர அரசியல் செயற்பாட்டாளர் ஹில்டா காடியாவை மணந்து கொள்கிறார்.

1956-பிப்ரவரி 15 முதல் குழந்தை ஹில்டா பீட்ரிஸ் குவேரா பிறக்கிறான்.

1955-ஜூலை 24 சே மற்றும் பிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைது செய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையிலிருக்கிறார்.

1958-கியூபப் புரட்சிப்படை சர்வாதிகாரி பாடிஸ்டாவின் படைகளை முறியடித்து முன்னேறுகிறது.

1958-டிசம்பர் 28 லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின் மீது போர் தொடுக்கிறார்.

1959-ஜூலை 1 சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடிவிடுகிறான். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.

1959-ஜூலை 2 பிடல் காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தால் நாடே ஸ்தம்பிக்கிறது.

1959-ஜூலை 3 ஹாவானாவை அடைந்து கபானா கோட்டையைக் கைப்பற்றுகிறார் சே.

1959-ஜூலை 8 பிடல் காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.

1959 மே 17 உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.

1959- ஜூன் 2 சேவும் அலெய்டா மார்ச்சும் திருமணம் செய்கிறார்கள்.

1959-ஜூன் 12 வணிக மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் மேற்கொள்ள ஐரோப்பிய-ஆப்பிரிக்க- ஆசிய நாடுகளுக்கு நீண்ட பயணம் மேற்கொள்கிறார்

1959-அக்டோபர் 7 தொழிற்துறைக்கு தலைவராகிறார்.

1959-நவம்பர் 26 தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

1960 அக்டோபர் சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா,சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டு மாத சுற்றுப்பயணம்

1960 நவம்பர் 24 சே-அலெய்டா முதல் குழந்தை அலெய்திதா பிறக்கிறாள்.

1961 ஜனவரி 3 அமெரிக்கா கியூபாவுடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொண்டது

1961 பிப் 23 சே அமைச்சராகி, தொழில்துறை அமைச்சகம் உருவாக்கப்படுகிறது.

1961 ஆகஸ்ட் 8 உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்கா நாடுகள் கருத்தரங்கில் கியூபாவின் பிரதிநிதியாகப் பங்கேற்று பேசுகிறார்

1962 மே 20 சே-அலெய்டாவுக்கு கமீலோ பிறக்கிறான்.

1962 ஆகஸ்ட் 27 சோவியத் பயணம்

1963 ஜூன் 14 சே-அலெய்டாவுக்கு சிலியா பிறக்கிறாள்.

1963 ஜூலை 8 பிரான்சிடமிருந்து விடுதலை பெற்ற அல்ஜீரியா நாட்டுக்கு சென்று அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்

1964 நவம்பர் 4 சோவியத் பயணம்

1964 டிசம்பர் 9 ஐ.நா.சபை, நியூயார்க், அல்ஜீரியா, மாரி, காங்கோ, கினியா, கானா, தான்ஸானியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத பயணம். 

1965 பிப்ரவரி 24 சே-அலெய்டாவுக்கு எர்னஸ்டிடோ பிறக்கிறான்.

1965 அக்டோபர் 31 காங்கோ புரட்சிப்படைக்கு பயிற்சி தர கியூபாவிலிருந்து விடைபெற்றுக் கொள்வதாக பிடலுக்கு கடிதம் எழுதுகிறார்.

1965 டிசம்பர் காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததால் ரகசியமாக கியூபா வருகிறார். பொலிவியா படையெடுப்புக்கு படை திரட்டுகிறார்

1966 நவம்பர் 4 மாறுவேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்

1967 மார்ச் 23 முதல் கொரில்லாத்  தாக்குதலில் பொலிவிய இராணுவப் பிரிவை சிதறடிக்கிறார் 

1967 ஏப்ரல் 16 ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக முக்கண்ட கருத்தரங்கில் சேவின் அறிக்கை வாசிக்கப்படுகிறது.

1967 ஆகஸ்ட் 4 சேவின் கொரில்லா படையை அழிக்க பொலிவிய இராணுவம் முன்னேறுகிறது

1967 செப்டம்பர் பொலிவிய இராணுவம் சேவின் கொரில்லாப் படையை சூழ்ந்தது.

1967 அக்டோபர் 8 சே உள்ளிட்ட எஞ்சியிருந்த 17 கொரில்லாப் போராளிகளை பொலிவிய இராணுவம் சூழ்ந்து கைது செய்கிறது.

1968 ஜூலை 1 காஸ்ட்ரோ முன்னுரையுடன் சே எழுதிய பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிப்படுகிறது.

1995 சே மற்றும் கொரில்லா வீரர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை தேடும் பணி தொடங்கியது

1997 ஜூன் 28 பொலிவியாவின் வாலேகிராண்ட் அருகே கனடா தெ அர்ரோயாவில் சே உள்ளிட்ட கொரில்லா வீரர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

1997 ஜூலை 14 சடல எச்சங்கள் கியூபா வந்தடைந்தன.

1997 அக்டோபர் 13 ஹவானா புரட்சி சதுக்கத்தில் வீரநினைவு விழா நடத்தப்பட்டது.

1997 அக்டோபர் 14 சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்பட்டன.

"புரட்சியாளர்கள் கொல்லப்படலாம். தோற்கடிக்கப்படுவதில்லை"
சேகுவேரா

- சூர்யா சேவியர்
 

 

;