articles

img

தீக்கதிர் சிறப்பு செய்தி தொகுப்பு...

1. கண்ணீர் சிந்தும் போட்டி....

முதலை இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

                            ****************

2. சீனாவின் அந்ஹுஹி எனும் பகுதிக்கு சீன வைரஸ் தடுப்பு குழுக்கள் அவசரமாக அனுப்பப்பட்டன. அங்கு தொற்று திடீரென உயர்ந்தது. எவ்வளவு தெரியுமா?

15 உறுதி செய்யப்பட்ட தொற்று; 16 அறிகுறி இல்லாத தொற்று. மொத்தம் 31 மட்டுமே! 

இதனை கவனிக்க தவறிய 5 அதிகாரிகள் பணி நீக்கம்! சில மருத்துவர்களின் பட்டம் இடைக்காலமாக நீக்கம். பலருக்கு எச்சரிக்கை கடிதங்கள்!அந்த பகுதி முழுதும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன.தொற்றை தடுக்க விழிப்புடன் இருப்பது என்பதற்கு இதனை உதாரணமாக எடுத்து கொள்ளலாமா?

                            ****************

3. நூற்றுக்கணக்கான பஞ்சாப் அகில இந்திய விவசாய சங்கத்தின் உறுப்பினர்கள், கோதுமை அறுவடை முடிந்தவுடன் போராட்டக் களத்துக்கு திரும்பினர். போராட்டம் தொடங்கி 26.05.2021 அன்று 6 மாதங்கள் பூர்த்தி அடைகின்றன. அன்றைய தினம் அனுசரிக்கப்பட உள்ள “கருப்பு தினத்தை” வெற்றிகரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                            ****************

4. உலக தடுப்பூசி திட்டத்துக்கு யார் அதிகமாக உதவியுள்ளனர்?

*    சீனா 60 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்தது; 25 கோடி ஏனைய நாடுகளுக்கு தந்துள்ளது.

*    ஐரோப்பிய ஒன்றியம் 32 கோடி உற்பத்தி செய்து 11 கோடி ஏற்றுமதி செய்தது.

*    இந்தியா 25 கோடி உற்பத்தி செய்து 6 கோடி ஏற்றுமதி செய்தது.

*    அமெரிக்கா 34 கோடி உற்பத்தி செய்தது. மிகச்சிறிய அளவே ஏற்றுமதி செய்துள்ளது.

                            ****************

5. கொட்டும் மழையிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர்கள் கேரளாவில் நெடுந்தூரம் பயணிக்கும் சரக்கு வாகன ஊழியர்களுக்கு உணவுப் பொட்டலம் தருகின்றனர்.

                            ****************

6. பெங்களூருவில் ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்து மதத்தை சார்ந்தபேராசிரியரின் எரிக்கப்பட்ட உடலின் அஸ்தியை நீர்நிலையில் கரைக்கிறார். கேரளாவில் பாலக் காட்டில் ஒரு இந்து பெண் மருத்துவர் மரணத்தின் வாசலில் உள்ள இஸ்லாமிய கோவிட் நோயாளிக்கு “கலிமா”எனும் பிரார்த்தனையை அரபியில் கூறுகிறார். அனைத்து மதவாதிகளே! இதுதான் இந்தியா!

                            ****************

7. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி...

நாடாளுமன்ற உறுப்பினர்கள்- 0

சட்டமன்ற உறுப்பினர்கள்- 0

கோவிட் 19 நிவாரணப் பணியில்- 1,00,000 தொண்டர்கள்.

 

தொகுப்பு : அ.அன்வர் உசேன் 

;