articles

img

அடக்குமுறைகளைத் தகர்த்த விவசாயிகள்..... நாடு முழுவதும் பரவுகிறது போராட்டம்....

மத்திய மற்றும் ஹரியானா- உத்தரப்பிரதேச அரசுகளின் அடக்குமுறை நடவடிக்கைக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வடஇந்தியா முழுவதும் பரவிவருகிறது.

விவசாயிகளை வேட்டையாட முயன்ற அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தில்லி எல்லையில் உள்ள போராட்ட மையங்களுக்கு விவசாயிகளின் வருகை தீவிரமடைந்துள்ளது. அண்டை மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிங்கு, காசிப்பூர், திக்ரி, ஷாஜகான்பூருக்கு அணி அணியாக வருகிறார்கள். சாலையில் பள்ளங் கள் அமைத்தும், போக்குவரத்தை தடுப்பதன் மூலமும், போராட்ட மையங்களை சுற்றி வளைத்தும், தண்ணீர், மின்சாரம்,இணையத் தொடர்பை துண்டிப்பதன் மூலமும் விவசாயிகளின் வருகையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந் துள்ளன.

பெரும்பாலான விவசாயிகள் மேற்குஉ.பி., ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்நிலங்களிலிருந்து வருகிறார்கள். டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களில் வருபவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். குடியரசு தினத்தன்று,சங்க பரிவார் ஆதரவாளர்களின் உதவியுடன் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பாதகமான சூழ்நிலைகளை விவசாயிகள் தமது இயக்கத்தை ஒழுங்கமைத்து தோற்கடித்தனர். காந்திஜியின் தியாகத்தின் நினைவு தினமான சனியன்று, போராட்ட மையங்களில் தலைவர்களும் விவசாயிகளும் உண்ணாவிரதம் இருந்தனர்.

அதிர்ச்சியில் மத்திய அரசு
போராட்ட மையங்களுக்கு மக்கள் வருவது குறித்து மத்திய அரசு அதிர்ச்சியில் உள்ளது. காஸிப்பூர் மையத்தை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த மத்தியமற்றும் உ.பி. அரசாங்கங்கள் மேற் கொண்ட நடவடிக்கை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக பாஜக தெரிவித் துள்ளது. பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்காயத்தை கைது செய்வதற்கான முயற்சியை ஹரியானா மற்றும்மேற்கு உ.பி.வைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் விமர்சித்துள்ளனர். ஆயிரத்திற் கும் குறைவான எதிர்ப்பாளர்களைக் கொண்டிருந்த காஸிப்பூரில் இப்போது பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.தில்லி- மீரட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காஸிப்பூரின் இருபுறமும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். சிங்கு செல்லும் பிரதான சாலை மூடப்பட்டது. போராட்டம் நடந்த இடங்களில் காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். சிங்கு, திக்ரி, காசிப்பூர் பகுதிகளில் இணையம் துண்டிக்கப்பட்டது. ஹரியானா மற்றும்மேற்கு உ.பி.யின் 18 மாவட்டங்களில் இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆத்திரமூட்டலில் சிக்காதீர்கள்
அரசாங்கம், காவல்துறை, சங்க பரிவார் எவ்வளவு தூண்டினாலும் போராட்டம்அமைதியாக தொடரும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் கூறினர். மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும். ஆர்ப்பாட்ட மையங்களை ‘உள்ளூர்வாசிகள்’ என்று போலியாக கூறிக்கொண்டு சங் பரிவார் குண்டர்கள் தாக்குகின்றனர். வரும் நாட்களில் மேலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று கிசான் மோர்ச்சா தலைவர்கள் தெரிவித்தனர். சனியன்று பிரதமர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திலும் விவசாயிகளின் கிளர்ச்சி ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்தது. வேளாண் சட்டங்களைரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அரசை கேட்டுக்கொண்டன.

அரசாங்க சதி வெற்றி பெறாது: யெச்சூரி
காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் குண்டர்களை கட்டவிழ்த்து விவசாயிகளைத் தாக்கி போராட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை வெற்றிபெறாது என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட் டத்திலும் இதே தந்திரத்தை அரசாங்கம் பயன்படுத்தியது. இந்த முறை அது வெற்றிபெறாது. ஹரியானா மற்றும் உ.பி.யில் மக்கள் எழுச்சிகள் அதை தெளிவாக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையில் ஆக்கிரமிப்பாளர்கள் நுழைய காவல்துறையினர் வாயில்களைத் திறந்து கொடுத்தது போராட் டத்தை தகர்ப்பதற்காகத் தான். வாயில் களைத் திறந்தவர்களையும் உள்ளே நுழைந்தவர்களையும் ஏன் பிடிக்கக் கூடாது. மாறாக, விவசாயிகள் மீது கருப்புச்சட்டங்களை அவர்கள் சுமத்துகிறார்கள் என்று யெச்சூரி கூறினார்.

                                                                     *********************  
வேளாண் சட்டம்: தனிநபர் மசோதாவுக்கு அனுமதி கோரினார்.... கே.கே.ராகேஷ் எம்.பி

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முன்மொழியப்பட்ட தனியார் மசோதாக்களை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.ராகேஷ் அனுமதி கோரியுள்ளார். மூன்று சட்டங்களும் அரசமைப்பிற்கு அப்பாற்பட்டவை என்று இம்சோதாக்கள் சுட்டிக்காட்டுகின்றன.விவசாயம் மற்றும் சந்தைகள்- விலை அரசியலமைப்பின் மாநில பட்டியலில் உள்ளன. எனவே அரசமைப்பு சாசனம் உறுதி அளித்த கூட்டாட்சி கொள்கைகளை மீறி இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும்- திரும்பப் பெறும் மசோதாக்களின் நோக்கம் மற்றும் காரணத்தை விளக்கும் ஒரு அறிக்கையை கே.கே.ராகேஷ் வெளியிட்டுள்ளார்.

                                                                *********************  

‘அடக்க முயற்சித்ததால் வலிமையடைகிறோம்’ சதி தோல்வியடைந்தது.... பி.கிருஷ்ணபிரசாத் பேச்சு

பாஜக அரசு அடக்க முயற்சிக்கும் போது விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் என்றுஅகில இந்திய விவசாயிகள் சங்க நிதி செயலாளர் பி கிருஷ்ணபிரசாத் தெரிவித்துள்ளார்.சிங்கு எல்லையில் உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை வாழ்த்தி பி.கிருஷ்ணபிரசாத் உரையாற்றினார். விவசாயிகள் போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்ற பெரும் சதி நடந்து வருகிறது. குடியரசு தினத்தன்றுதனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அதன் ஒரு பகுதியாகும். விவசாய அமைப்புகள் முடிவு செய்திருந்தால், செங்கோட்டையே போராட்டத்தின் மையமாக இருந்திருக்கும். அவ்வாறு செய்யத் தவறியதை விவசாய அமைப்புகளின் பலவீனமாக மோடி அரசு பார்க்கக்கூடாது என்றார்.போராட்ட மையத்தை பாஜக தாக்குகிறது. இதுபோன்ற ஆத்திரமூட்டல்களுகளில் விவசாயிகள் விழுந்துவிட மாட்டார்கள். மூன்று சட்டங்களும் வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்என்றும் கிருஷ்ணபிரசாத் கூறினார். தலைவர் களும் விவசாயிகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர். திக்ரி, ஷாஜகான்பூர், காசிப்பூரிலும் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். கிசான் சபா தலைவர்கள் தில்லியில் உள்ள சுர்ஜித் பவனில் உண்ணாவிரதம் இருந்தனர்.

                                                                *********************  

விவசாயிகள் எழுச்சி மேலும் தீவிரமடைந்ததால் நம்பிக்கை இழந்த கார்ப்பரேட் ஊடகங்கள்

விவசாயிகளின் கிளர்ச்சி தீவிரமடைந்து வரும் நிலையில், பொய்களை பரப்புகின்ற வலதுசாரி கார்ப்பரேட் ஊடகங்களின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.குடியரசு தின விவசாயிகள் அணிவகுப்பு முதல், சில ஊடகங்கள் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை பரப்புகின்றன. விவசாயிகள் அனைவரையும் ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிக்கும் முயற்சியில் அவை ஈடுபட்டுள்ளன. ஆங்கில மொழி சேனல்களான சிஎன்என், நியூஸ் 18, டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி, இந்தி சேனல்களான ஜீ நியூஸ், இந்தியா டிவி ஆகியவை விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தின. 

விவசாயிகளை குண்டர்கள் என்று வர்ணித்தனர். செங்கோட்டையில் தேசியக் கொடி விவசாயிகளால் அகற்றப்பட்டதாகவும், காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாகவும் அவை மீண்டும் மீண்டும் தெரிவித்தன. தேசியக் கொடியை யாரும் அகற்றவில்லை என்கிற, காட்சிகள் சமூக ஊடகங்களில் நிரம்பிய போதிலும் அவர்கள் தங்களதுசெய்தியை திருத்திக் கொள்ளவில்லை.சீக்கியக் கொடியை மோடி மற்றும் சங்க பரிவாரின் நெருங்கிய கூட்டாளியான தீப் சித்து ஏற்றினார் என்பதை வேண்டுமென்றே மறைத்தனர். போராட்ட மையங்கள்லியாக இருப்பதாக தவறான செய்தி வழங்கப்பட்டது. உள்ளூர் வாசிகள் என்கிற பெயரில் வந்தவர்கள் சங்க பரிவார் என்பது சமூகஊடகங்களில் நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் அதைப் பார்த்ததாக காட்டிக்கொள்ளவில்லை. ராகேஷ்திக்காயத் விரைவில் காவல்துறையிடம் சரணடைந்து காசிப்பூர் போராட்ட மையத்தை காலி செய்வார் என்று செய்திகள் வழங்கின. இறந்தாலும் அந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றுதிக்காயத் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் மீது அவதூறு பொழிந்தன. தொலைக்காட்சி சேனல்களின் பொய்களை நிராகரித்து விவசாயிகள் போராட்ட மையங்களுக்கு விரைந்த போது அவர்கள் தங்களது கேமராவை வேறு காட்சிகளுக்கு திருப்பினர்.

                                                                *********************  

விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் மனிதச் சங்கிலிகள்....

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பீகாரில், இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகளின் பெரும் கூட்டணி மாநிலம் முழுவதும் மனித சங்கிலிகளை அமைத்தன. தலைநகர் பாட்னாவில் உள்ள புத்த பூங்கா மனிதச் சங்கிலியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இந்த பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம் மாநிலச் செயலாளர் அவதேஷ்குமார், சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் இணைந்தனர்.

                                                                *********************  

விவசாயிகளை தாக்க வந்த பாஜக குண்டர்கள்

சிங்கு எல்லையில் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைத்தெரிவிக்கும் விவசாயிகளைத் தகர்த் தெறிய பாஜக ‘பூர்வீகவாதிகள்’ என்றபோர்வையில் களமிறங்கினர்.குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை அவமதித்த விவசாயிகள் ‘பூர்வீகவாசிகளால்’ தாக்கப்பட்டதாக சில தேசிய ஊடகங்கள் செய்திவெளியிட்டன. இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் என்பது அம்பலமானது.

வடமேற்கு தில்லியைச் சேர்ந்தபாஜக தலைவர் அமன் குமார் வன்முறைக்கு தலைமை தாங்கினார். இதன் காட்சிகள் வெளிவந்தன. 31 ஆவது வார்டு பாஜக கவுன்சிலர்அஞ்சு தேவியின் கணவர் அமன் குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் அமன் குமாரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. அமன்குமாரின் நண்பரும் உள்ளூர் பாஜக தலைவருமான கிருஷ்ணன் தபாஸும் விவசாயிகளைத் தாக்கினார். ‘உள்ளூர் வாசிகள்’ என்ற போர்வையில் பாஜகவினர் குண்டர்களுடன் வந்து விவசாயிகளைத் தாக்கினர்.

காவல்துறையினர் தடுப்புகளைத் தாண்டி விவசாயிகள் மீது கற்களைவீசினர். விவசாயிகளின் கூடாரங் களை அழிக்க முயன்றனர். இந்த காட்சிகள் வெளியானதிலிருந்து வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர், குண்டர்கள், காவல்துறையினர் மீதான கோபம் சமூக ஊடகங்களில் பரவியது.

தொகுப்பு: சி.முருகேசன்

;