articles

காணி நிலம் வேண்டும் பராசக்தி! - K.அருள்செல்வன்,

நமது நாட்டில் விவசாய நிலங்கள், அரசு தரிசு நிலங்கள் (தீர்வை விதிக்கப்பட்டது, தீர்வை விதிக்கப்படாதது) நத்தம் புறம்போக்கு, நீர்நிலைப் புறம்போக்கு, வண்டிப்பாதை புறம்போக்கு, மந்தைப் புறம்போக்கு, களம் புறம்போக்கு, கோவில் நிலங்கள், வன நிலங்கள், அறக்கட்டளை என பல்வேறு வகையான நிலங்கள் அரசு கணக்கில் உள்ளன.

மேற்படி நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்  கள் குறிப்பிட்ட சில நபர்கள் வசம் இருந்து வந்  தன. நிலத்திலே உழைப்பவர்களிடம் நிலம்  இல்லை; நிலம் எங்கே என்று தெரியாதவர்களி டம் கண்ணிற்கு எட்டிய, எட்டாத தூரம் வரை  சொந்தமாக உள்ளது. இன்றைக்கு அரசு புறம்  போக்கு நிலங்கள், வன நிலங்கள், நீர்நிலைகள் உட்பட சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. விவசாய நிலங்கள்கூட ரியல் எஸ்டேட் அதிபர்கள் கையில் சிக்கிக்கொண்டுள்ளன. அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டு, வீட்டு மனை களாகப் பிரிக்கப்பட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது. பண்ணை நிலங்களாக மாற்றப்பட்டு, தனிநபர் சொத்தாக மாற்றப்படுகிறது.

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம்

இந்நிலையில் பொட்டு நிலம்கூட இல்லாத தலித் மக்களுக்காக 1892ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை  பஞ்சமர் நிலம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் பட்டியலின மக்கள் மட்டுமே அனுபவிக்க முடியும். முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் எவ்வித வில்லங்க விற்கிரையம் செய்ய முடியாது. அதன்பிறகு வில்லங்க விற்கிரையம் செய்யவேண்டுமானால் பட்டி யலின மக்களுக்கு மட்டுமே செய்ய முடியும்.  வேறு வகுப்பினருக்கு வில்லங்க, விற்கிரை யம் செய்தால் செல்லாது. அதை மீறி யார் வாங்கி னாலும், அரசு பறிமுதல் செய்து மீண்டும் பட்டி யலின மக்களுக்கு வழங்க சட்டப்பாதுகாப்பு உள்ளது. இவ்வளவு இருந்தும் பஞ்சமர் நிலங்கள் பட்டியலின மக்களிடம் இல்லாமல் ஆதிக்க சக்தி களின், நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் உள் ளன. திண்டுக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட தமிழகம் முழுவதும் இத்தகைய ஆக்கி ரமிப்பிற்கு எதிரான போராட்டங்கள் செங்கொடி இயக்கம் தலைமையில் நடைபெற்று வரு கின்றன. கடந்த 2006ஆம் ஆண்டில் நில நிர்வாக ஆணையர் (சி.எல்.ஏ) ஒரு தகவல் அறியும் உரிமை சட்ட மனுதாரரிடம் 1.26 லட்சம் ஏக்கர்  பஞ்சமி நிலம் இருப்பதாகவும், அதில் சுமார்  10,620 ஏக்கர் பட்டியல் இனத்தவர் அல்லாத வர்களிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பட்டியல் இனத்தவர் அல்லாதவர்களிடம் உள்ள நிலத்தை மீட்டெடுப்பது, நிலத்தை அடையாளம் காண்பதைவிட பெரிய சவாலாக இருக்கும் என்  பதை ஒப்புக்கொண்ட அந்த அதிகாரி அதற்காக ஒரு சட்டத்தை உருவாக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போதுவரை சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அடையாளம் கண்டறி யப்பட்டுள்ளது. உண்மையான அளவு இன்னும் அதிகம் என்பதால் கணக்கெடுப்பு நடந்து வரு வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடையா ளம் காணப்பட்ட நிலங்களில் 30%க்கும் அதிக மான நிலங்கள் பட்டியல் சாதியினரைத் தவிர வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிலக்குவியலை உடைக்க...

குறிப்பிட்ட அளவிற்குமேல் நிலத்தை குவித்து வைத்துள்ளதற்கு எதிராக எழுந்த  போராட்டத்தின் பின்னணியில் உருவாக்கப் பட்டதே நிலச்சீர்திருத்தச் சட்டம். இந்தியாவில் 1958ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 1961ஆம்  ஆண்டு நிலச்சீர்த்திருத்தச் சட்டம் உருவாக் கப்பட்டது. இதன்படி ஒரு நபர் அல்லது குடும்பம்  30 ஏக்கர் நிலம் வைத்துக்கொள்ளலாம் என்றும்,  அதற்குமேல் உள்ளதை அரசு எடுத்து நிலமற்ற வர்களுக்கு வழங்கலாம் என்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது, இதிலிருந்து தப்பிக்க  சிலர் வினோபாவேயின் பூமிதான இயக்கத்திற்கு  நிலத்தை அளித்தனர். இந்த உச்சவரம்பு நிலம் எடுப்பது 2015 பிப்ரவரி வரை நடைபெற்றது. நில  உச்சவரம்பு சட்ட திருத்தப்படி 120 ஏக்கர் புஞ்சை,  60 ஏக்கர் நஞ்சை சொந்தமாக வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த உச்சவரம்பு நிலங்களும் இன்றளவும் தமிழகத்தில் முழுமையாக நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமலேயே ஆக்கிரமிப்பி லேயே உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆண்டி பட்டி முதல் காவலப்பட்டி, பெரியம்மாபட்டி,  பாலசமுத்திரம் வரை நெய்க்காரப்பட்டி எஸ்டேட் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு இன்று வரை முழுமையாக பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளதால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்  கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்றளவும் தமிழ்நாட்டில் 1.50 கோடிக்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர்கள் சிறு, குறு விவசாயிகள் வசித்து வருகின்றன. குடி யிருக்க ஒரு செண்ட் இடம்கூட இல்லாமல், வீடில்லாமல் 25 லட்சம் குடும்பங்கள் வசித்து  வருகின்றனர்.

நிலங்கள் அனைத்தும் முதலாளி கள், ரியல் எஸ்டேட் அதிபர்களால், நிறு வனங்களால் களவாடப்பட்டு ஒரு செண்ட் நிலம்  லட்சக்கணக்கில் விலை தீர்மானித்து விற்கப்படு கிறது. அன்றாட வாழ்க்கைக்கே அல்லா டிக்கொண்டிருக்கின்ற ஏழை விவசாயத் தொழி லாளர்கள் லட்சங்களில் எப்படி வீட்டுமனை வாங்க முடியும்? அரசும் யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டதுபோல் விழா நடத்தி, சில ஆயிரம் என்ற அளவிற்கு விளம்பரத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிவிட்டுச் செல்கின்ற னர். இது பிரச்சனையை தீர்க்க உதவவில்லை. எனவே, யாருக்கு நிலம் வேண்டுமோ அவர்  களிடம் நிலம் இல்லாமல் சம்பந்தம் இல்லாத வர்களிடம் நிலம் குவிந்துள்ளதை உடைத்தெறி யவேண்டும். இதற்கு கீழ்தஞ்சை விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் பண்ணையடிமை முறைக்கு எதிராக குத்தகை விவசாயிகளை பாதுகாக்க செங்கொடி இயக்கத்தின் தலைமை யில் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டமே நமக்கு முன்னுதாரணமாக உள்ளது. தோழர்கள் பி. சீனிவாசராவ், பி.எஸ்.தனுஷ்கோடி, என்.வெங்க டாசலம், களப்பால் குப்பு, கோ.வீரய்யன் போன்ற தியாகிகளின் தீரத்தை முன்னெடுத்து மீண்டும் ஒரு களம்கண்டு நிலத்தை மீட்டெ டுப்போம். இன்றைக்கும் நம் கண்முன்னால் காட்சியளிக்கும் கீழ்வெண்மணி தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்து வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுப்போம். காணிநிலம் வேண்டும் பராசக்தி! காணி நிலம் வேண்டும்! என்ற மகாகவி பாரதியின், பாட லுக்கு ஏற்ப உரியவர்களுக்கு நிலம் கேட்டு, நிலத்தை மீட்டெடுக்க வரும் பிப்ரவரி 4, 5, 6 -2023இல் புதுக்கோட்டையில் அகில இந்திய விவ சாய தொழிலாளர்களின் 10ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது.

 

;