articles

img

மோடி இழைத்த தவறுகள்.... (தி கார்டியன் தலையங்கம்)

இந்தியாவில் இருந்து வருகின்ற அரசியல்ரீதியான இறுமாப்பு தொற்றுநோயின் யதார்த்தத்தை இந்த வாரம் சந்தித்தது. நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்து தேசியவாத அரசு நாடு கோவிட்-19 இன் இறுதியாட்டத்தில் இருக்கிறது என்று இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் கூறியிருந்த போதிலும் இப்போது இந்தியா ஒரு நரகமாகவே இருந்து வருகிறது. போதியபடுக்கைகள், ஆக்சிஜன் இல்லாத மருத்துவமனைகளுடன் மிகுந்த பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இரண்டாவது அலை மூலம் பி.1.617 என்றழைக்கப்படுகின்ற கொரோனா வைரஸின் புதிய இரட்டைப் பிறழ்வு தீவிரத்துடன் வெளிப்பட்டுள்ளது. சவக்கிடங்குகள் நிரம்பி விட்டதால், வீடுகளிலேயே உடல்கள் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் இறப்பை ஏற்படுத்துகின்ற வகையிலே தெருக்களை ஆபத்து சூழ்ந்திருப்பதாக எச்சரிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய சார்ஸ் கோவி-2 நோய்த்தொற்றுகள் 3,32,730 என்ற அளவில் இந்தியாவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக உலகளவிலே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் என்ற அளவிலே அந்த எண்ணிக்கை அதிகரித்துள் ளது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2,200க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இருந்து வருகின்ற விமானங்களைத் தடைசெய்துள்ள நாடுகள் தங்களுடைய மக்கள் இந்தியாவிற்கு பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றன அல்லது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்குச் சென்று திரும்பி வந்தவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

ஆறு வாரங்களுக்கு முன்னர் இந்தியமக்கள்தொகையில் ஒரு சதவீதம் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதிருந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய நாட்டை ‘உலகின் மருந்தகம்’ என்று அறிவித்திருந்தது தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கை மீண்டும் தொடங்கப்படலாம் என்பதற்கான அறிகுறியாகவே அறியப்பட்டிருந்தது. தொற்றுநோயின் அதிவிரைவுப் பரவல் ஆயிரக்கணக்கான வர்கள் கிரிக்கெட் மைதானங்களில் குழுமிய போது, லட்சக்கணக்கான இந்துக்கள் கும்பமேளாவின் போது கங்கையில் நீராடிய போது நடந்தேறியது. தொற்றுநோய்ப் பரவல் அதிகரித்த வேளையில் டொனால்ட் ட்ரம்பைப் போல திரு மோடியும்தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைக் கைவிடவில்லை. ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற்ற இந்தியாவில் முகக் கவசம் அணியாத மோடி மிகப்பெரிய பேரணிகளை ஏப்ரல் மாதம் நடத்தினார். மோடியின் குணாம்சமாக இருந்து வருகின்றஇந்திய விதிவிலக்கு வாதம் மெத்த னத்தையே வளர்த்தெடுத்துக்கொடுத்தது.தேசிய மகத்துவம் குறித்து இருந்து வந்த அனுமானம் குறிப்பாக தடுப்பூசி உற்பத்தியில் ஆயத்தமின்மைக்கே வழிவகுத்துக் கொடுத்தது. உலகளாவிய மருந்து தயாரிப்பில் இந்தியாதான் அச்சாணியாக இருக்கப் போகிறது என்று மேற்குலக நாடுகள் ஊக்குவித்தன. ஆனால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் இந்த வாரம் ‘அது ஒரு பிழையாகஇருக்கலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். சீனாவும் அமெரிக்காவும் இப்போதுஇந்தியாவை விட அதிகமாக கோவிட்-19தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வரு கின்றன. ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைஎளிதாக்கித் தருவதில் இன்னும்வாஷிங்டனை இந்தியாவால் சமாதானப் படுத்த முடியவில்லையாதலால் அது ரஷ்யாவிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது.

தனது உள்ளுணர்வு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை ஏளனம் செய்கின்ற அதீத நம்பிக்கை ஆகியவற்றால் இந்தியப் பிரதமர் இப்போது அவதிப்பட்டு வருகிறார். இந்த வாரம்கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக தங்களுக்கு ஆலோசனை வழங்கத் துணிந்த முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மீது மோடியின் அமைச்சர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு கோடிக்கணக்கான இந்திய மக்கள் மீது மிகக் கடுமையான திடீர் பொது முடக்கத்தை மோடி திணித்திருந்தார். எந்தவொரு எச்சரிக்கையுமின்றி கொண்டு வரப்பட்ட பணி நிறுத்தம் நாட்டின் உயர்மட்ட தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு எதிராகவே சென்றது. ஆனால் தன்னிட முள்ள நாடகத்தனமான உடல்மொழிகள் மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு ஏற்றவையாகவே அவரது அந்தச் செயல்பாடு இருந்தது. கோவிட்-19ஆல் இறந்து போனவர்களின் விகிதம் மிகவும் இளைய வயதினரை அதிகமாகக் கொண்டுள்ள இந்தியாவில் மற்ற நாடுகளை விடக் குறைவாகவே இருக்கும்.

தமிழில்: தா.சந்திரகுரு

;