articles

பிரதமர் அவர்களே - சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் கடிதம்

2021 நவம்பர் 19 அன்று காலை தாங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை கோடிக் கணக்கான விவசாயிகள் கேட்டார்கள். 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னரும், எங்களுடன் கலந்து ஆலோசனை செய்து  தீர்வுகாண்பதற்குப் பதிலாக,  நீங்கள் தன்னிச்சையாக முடிவினை அறிவித்திருப்பதை நாங்கள் கண்டோம். இருப்பினும், மூன்று வேளாண் சட்டங்களை யும் விலக்கிக்கொள்வதாக முடிவினை அறிவித்திருப்ப தற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த உறுதி மொழியையும் அறிவிப்பையும் உங்கள் அரசாங்கம் விரைவில் நிறைவேற்றும் என நாங்கள் நம்புகிறோம். வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் கோரிக்கை அல்ல  என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அரசாங்கத்து டன் பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்திலிருந்தே சம்யுக்த கிசான் மோர்ச்சா மேலும் மூன்று முக்கியமான கோரிக்கைகளையும் எழுப்பி வந்தது.

  1. விவசாயிகளின் அனைத்துவிதமான உற்பத்திச் செலவுகளுடனும் (C2+50 சதவீதம்) 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அதன் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விவசாயி களுக்கும், அனைத்து வேளாண் பொருள்களுக்கும் சட்ட ரீதியாக அளித்திட வேண்டும்; அப்போதுதான் ஒவ்வொரு விவசாயிக்கும் அரசாங்கத்தால் அனைத்துப் பயிர்களுக்கும் அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதமாக விவசாயிகள் பெற முடியும் என்றும் கோரி வந்தோம். (2011இல் பிரதமரால் அமைக்கப்பட்ட குழுவானது இந்தப் பரிந்துரையைச் செய்திருந்தது. இதை நிறைவேற்றுவோம் என்று உங்கள் அரசாங்கமும் நாடாளுமன்றத்தில் அறிவித்தது. )
  2. 2020/2021 மின்சார திருத்தச் சட்ட முன்வடிவை யும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். (பேச்சுவார்த்தையின்போது, அரசாங்கம் இதனை விலக்கிக்கொள்வதாக உறுதி யளித்தது. எனினும் உறுதிமொழியை மீறும் விதத்தில் இச்சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தது.) 
  3. தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்று மாசு மேலாண்மையின் ஷரத்துக்களை மீறுவ தாகக் கூறி  விவசாயிகளுக்கு தண்டனை அளிக்கும் ஷரத்துக்களை நீக்க வேண்டும் என்று  கோரிவந்தோம். (இந்த ஆண்டு, அரசாங்கம் விவசாயி விரோத ஷரத்துக்கள் சிலவற்றை நீக்கியது. எனினும் 15ஆவது பிரிவின்கீழ் விவசாயிகளுக்கு தண்டனை அளித்திடும் பிரிவு மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.) இவ்வாறு முக்கியமான கோரிக்கைகள் தொடர்பாக உருப்படியான அறிவிப்பு எதுவும் அரசுத் தரப்பில் இல்லாதது விவசாயிகளை ஏமாற்றம் அடைய வைத்தி ருக்கிறது. விவசாயிகள்  வரலாறு படைத்திட்ட தங்களு டைய போராட்டத்தின் மூலமாக மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தங்களின் கடும் உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருள்களுக்குக் கட்டுபடியாகக்கூடிய விதத்தில் குறைந்தபட்ச ஆதார விலையும் சட்டரீதியாக கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
  4. இக்கால கட்டத்தில் (2020 ஜூன் மாதத்திலிருந்து இது நாள்வரை), தில்லி, ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிர தேசம் மற்றும் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளன. அவை அனைத்தும் உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.
  5. லக்கிம்பூர் கெரியில் நடந்த படுகொலையின் மூளை யாகச் செயல்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ரா தெனி மற்றும் அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனை வரும் இப்போதும் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக் கிறார்கள். இப்போதும் உங்கள் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வருகிறார். உங்களுடன் மேடை யில் அமர்ந்திருக்கிறார். அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், கைது செய்யப்பட வேண்டும்.
  6. இப்போராட்டத்தின்போது இதுவரை சுமார் 700 விவ சாயிகள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்.  அவர் களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் மறுவாழ்வுக்கு ஆதரவு அளித்திட வேண்டும். இறந்த தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் எழுப்புவதற்கு சிங்கு எல்லையில் இடம் அளித்திட வேண்டும். விவசாயிகள் அனைவரும் வீடு திரும்பவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறீர்கள்.  வீதிகளில் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கத்தான் நாங்களும் விரும்புகிறோம். எங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நிறைவேறியவுடனேயே நாங்களும் எங்கள் இல்லங் களுக்குத் திரும்பிச்சென்று, எங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து, விவசாய வேலையை மீண்டும் மேற்கொள்ளத் தான் விரும்புகிறோம். நீங்களும் அதை விரும்பினால், எங்களின் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேற்கண்ட ஆறு கோரிக்கைகள் தொடர்பாக எங்களுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதுவரையிலும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தன் போராட்டத்தைத் தொடரும். 

 

 

;