திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதனன்று வெளியிட்டார். இதன்படி, தற்போதுள்ள எம்.பி.க்களான கலாநிதி வீராசாமி (வடசென்னை), தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென் சென்னை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் (காஞ்சிபுரம்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கதிர் ஆனந்த் (வேலூர்), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை) ஆ.ராசா (நீலகிரி), கனிமொழி (தூத்துக்குடி) ஆகியோர் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), எஸ்.செந்தில்குமார் (தருமபுரி) ஆகியோருக்கு மாற்றாக முன்னாள் எம்.பி.செல்வகணபதி (சேலம்), மலையரசன் (கள்ளக்குறிச்சி), ச. முரசொலி (தஞ்சாவூர்), கே.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), அ. மணி (தருமபுரி) ஆகிய புதிய முகங்கள் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தேனியில் தங்க தமிழ்ச்செல்வன், ஈரோட்டில் பிரகாஷ், கோவையில் கணபதி ராஜ்குமார், ஆரணியில் தரணிவேந்தன், தென்காசியில் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் புதிதாக களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியலில் பட்டதாரிகள் 19 பேர், முதுநிலை பட்டதாரிகள் 12 பேர், முனைவர்கள் 2 பேர், மருத்துவர்கள் 2 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.2 பேர் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர்.
நேரடி களத்தில் திமுக-அதிமுக : வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய 18 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை அதிமுக எதிர்கொள்கிறது.
திருப்பெரும்புதூர்
பெயர்: டி.ஆர்.பாலு வயது: (82) படிப்பு:பி.எஸ்சி. தொழில்: வர்த்தகம் கட்சிப் பதவி: திமுக பொருளாளர் முந்தைய தேர்தல்கள்: 1986-இல் மாநிலங்களவை உறுப்பினர்.1996,1998, 1999, 2004, 2009, 2019 தேர்தல்களில் மக்களவை உறுப்பினர். மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.
தூத்துக்குடி
பெயர்: கனிமொழி கருணாநிதி வயது: (56) படிப்பு: பி.ஏ., வணிகப்பொருளியல்
தொழில்: அரசியல்வாதி, கவிஞர்,
கட்சிப் பதவி: திமுக துணைப் பொதுச் செயலாளர்
முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி
நீலகிரி (தனி)
பெயர்: ஆ.ராசா வயது: (60)
படிப்பு: பி.எஸ்சி,பி.எல்., எம்எல்.
தொழில்: வழக்குரைஞர்
கட்சிப் பதவி: திமுக துணைப் பொதுச் செயலாளர்
முந்தைய தேர்தல்கள்: 2014 - மக்க ளவைத் தேர்தல் தோல்வி, 2019-வெற்றி.
மத்திய சென்னை
பெயர்: தயாநிதி மாறன்
வயது: (57)
படிப்பு: பி.ஏ.,
முந்தைய தேர்தல்கள்:
2004, 2009, 2019- மக்களவைத் தேர்தலில் வெற்றி,
2014- தோல்வி
அரக்கோணம்
பெயர்: எஸ்.ஜெகத்ரட்சகன்
வயது: (76)
படிப்பு: எம்ஏ., டி.லிட்.
தொழில்:மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஐந்து நட்சத்திர உணவகங்கள், தொழிற்சாலைகள். கட்சிப் பதவி: உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், கொள்கை பரப்பு இணைச் செயலாளர்
முந்தைய தேர்தல்கள்: 1980-84 உத்தரமேரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ, 1984-89 செங்கல்பட்டு எம்.பி.
1999- 2004, 2009-14, 2019-24 3முறை அரக்கோணம் தொகுதி எம்.பி. 2009-12 தகவல் ஒலிபரப்புத் துறை இணைஅமைச்சர்
வடசென்னை
பெயர்: கலாநிதி வீராசாமி
வயது : (54)
படிப்பு: எம்.எஸ்., எப்ஆர்சிஎஸ்., எம்சிஎச்.,
தொழில்:மருத்துவர்
முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி.
தென் சென்னை
பெயர்: த.சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன்
வயது: (61)
படிப்பு:எம்.ஏ.,எம்.பில்., பி.எச்.டி.,
தொழில்:கவிஞர்
முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி
காஞ்சிபுரம் (தனி)
பெயர்: க.செல்வம் வயது: (50) படிப்பு:எம்.காம்., எம்.பில்., ல்எல்பி. தொழில்:விவசாயம் கட்சிப் பதவி: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி. 2வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேலூர்
பெயர்: டி.எம்.கதிர்ஆனந்த் வயது: (49)
படிப்பு: பி.காம்., எம்பிஏ (சர்வதேச வர்த்தகம்) தொழில்: வர்த்தகம்,
அரசியல் கட்சிப் பதவி : திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநிலத் தலைவர் முந்தைய தேர்தல்கள்: மக்களவைத் தேர்தல் 2019 வெற்றி
தருமபுரி
பெயர்: ஆ.மணி வயது: 55
படிப்பு: பி.காம், பி.எல்.,
தொழில்:வழக்குரைஞர்
கட்சிப் பதவி: தருமபுரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்
முந்தைய தேர்தல்கள்: 2019 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி.
திருவண்ணாமலை
பெயர்: சி.என்.அண்ணாதுரை
வயது:(51) படிப்பு:பி.காம்.
தொழில்: விவசாயம், ரெடிமிக்ஸ் கான்கிரீட்
கட்சிப் பதவி: 2012 முதல் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்
முந்தைய தேர்தல்கள்: 2014 - மக்களைத் தேர்தல் தோல்வி,
2019 - வெற்றி.
ஆரணி
பெயர்: எம்.எஸ்.தரணிவேந்தன்
வயது: (58)
படிப்பு: பத்தாம் வகுப்பு
தொழில்: விவசாயம்
கட்சிப் பதவி: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட
திமுக செயலாளர்.
கள்ளக்குறிச்சி
பெயர்: தே.மலையரசன்
வயது: (49)
படிப்பு: எம்.காம்.,
கூட்டுறவு மேலாண்மையில்
பட்டயப் படிப்பு.
தொழில்: விவசாயம்
கட்சிப் பதவி: தியாகதுருகம்
பேரூர் செயலர்.
சேலம்
பெயர்:டி.எம்.செல்வகணபதி
வயது:(65) படிப்பு:எம்.ஏ.,எல்எல்பி.
கட்சிப் பதவி: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்.
முந்தைய தேர்தல்கள்: 1991 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி; 1999 சேலம் தொகுதியில் வெற்றி.
ஈரோடு
பெயர்: கே.இ.பிரகாஷ்
வயது: (48) படிப்பு: இளநிலை பொருளாதாரம்
தொழில்: டைல்ஸ் விற்பனை, விவசாயம்
கட்சிப் பதவி: திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்
கோயம்புத்தூர்
பெயர்: கணபதி ப.ராஜ்குமார்
வயது: (59) படிப்பு: எம்.ஏ.,எல்.எல்.பி., பிஎச்.டி./ தொழில்: விவசாயம்
கட்சிப் பதவி: திமுக கோவை மாநகர் மாவட்ட அவைத் தலைவர்.
முந்தைய தேர்தல்கள்: 2014 கோவை மேயர் இடைத்தேர்தலில் வெற்றி.
பொள்ளாச்சி
பெயர்: கே.ஈஸ்வரசாமி
வயது : (47)
படிப்பு: பத்தாம் வகுப்பு
தொழில்: வர்த்தகம், நூற்பாலை
கட்சிப் பதவி: மடத்துக்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர்
பெரம்பலூர்
பெயர்: கே.என். அருண் நேரு
படிப்பு: (40)
படிப்பு: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்எஸ் பட்டம் தொழில்: விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகம்.
கட்சிப் பதவி: திமுக அடிப்படை உறுப்பினர்.
தஞ்சாவூர்
பெயர்: ச.முரசொலி. படிப்பு: (45)
படிப்பு: பி.எஸ்ஸி., பி.எல்.
தொழில்: வழக்குரைஞர்
கட்சிப் பதவி: தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்.
முந்தைய தேர்தல்கள்: 2006 தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றி
தேனி
பெயர்: தங்க.தமிழ்ச்செல்வன்
வயது: (62) / படிப்பு: எம்.ஏ.
தொழில்: விவசாயம்
கட்சிப் பதவி: தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்
முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி
தென்காசி (தனி)
பெயர்: ராணி ஸ்ரீகுமார்
வயது: (40)
படிப்பு: எம்.பி.பி.எஸ்.,
எம்.டி.
தொழில்: மயக்கவியல்
மருத்துவர்
கட்சிப் பதவி: திமுக உறுப்பினர்.