articles

img

தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கியது யார்?

திமுக ஆட்சியின் போது  விட்டுச்சென்ற கடன்களை நாங்கள் அடைத்தோம் என்று அதிமுக அரசின் முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் அமைச்சர்களும் திரும்ப திரும்பத் ஒரு பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

 உண்மை என்ன?
கலைஞர் தலைமையில் திமுக ஆட்சிநடைபெற்றது 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாண்டுகள். இதற்கு பின்னர் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.அரசு தனது பட்ஜெட்டில் மொத்த வருவாய் வரவினங்களாக முன்வைத்த தொகைக்கும், உண்மையில் வந்த வருவாய் வரவினங்களின் தொகைக்கும் இடையிலான வித்தியாசமே வருவாய் பற்றாக்குறை ஆகும்.  

       கலைஞர் ஆட்சி

2009-10    3,531.22 கோடி

2010-11    2,728.69 கோடி

               *************

       ஜெயலலிதா ஆட்சி 

2015—16    4,616.02  கோடி

               *************

        எடப்பாடி ஆட்சி 

2016-17    15,154.47 கோடி    

2017-18    15,930 .00 கோடி

2018-19    7,490.58 கோடி

2019-20    19,319.20 கோடி    

2020-21    65,994.07 கோடி

2020-21ஆம் ஆண்டு ஏற்பட்ட கோவிட் காரணமாக கூடுதல் செலவு என்ற அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் அரசு தன்னுடைய வரவு செலவு அறிக்கையில்குறிப்பிட்டுள்ளவாறு ரூ.12,000 கோடி கூடுதல்செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  2020-21 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட நிகர வருவாய் சுமார் 17 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. இருந்த போதிலும் கோவிட் காலத்தை பயன்படுத்தி பெரிய அளவிற்கான செலவுகளுக்கு மாநில நிதியினை பயன்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.

 மாநில அரசின் கடன்

2009-10      71,497.55 கோடி

2010- 11     81,656.62 கோடி

2015-16    2,11,483.00  கோடி

2016-17    2,52,431.00 கோடி

2017-18    3,14,366.00  கோடி

2018-19    3,55,844.84 கோடி

2019-20    3,97,495.96 கோடி

2020-21    4,85,502.54 கோடி 

அதிமுக அரசு ஜெயலலிதாவின் தலைமையில் இருக்கும் வரையில் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிதி நிர்வாகம் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்தின் கீழ் கட்டுப்பாட்டுக்குள் இல்லாததையே இந்த விபரங்கள் வெளிப்படுத்துகின்றன.2015-16ஆம் ஆண்டு மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் நிகரக்கடன் அளவு 19.23 சதவிகிதமாக இருந்தது; படிப்படியாக அதிகரித்து 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிய மதிப்பீட்டின்படி 24.98 சதவிகிதமாக இருக்கும் எனமாநில அரசின் பட்ஜெட் அறிக்கை குறிப்பிடுகிறது. இது தொடருமானால் 2022ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று ரூ.5,70,189.29 கோடியாகவும் மொத்த மாநில உற்பத்தியில் 26.69 சதவிகிதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மக்கள்தொகையான 8.37 கோடியோடு ஒப்பிடுகையில் ஒவ்வொரு தனி நபர் மீது ரூ.68,122.00 கடன் சுமையை ஏற்றியுள்ளது. இந்த உண்மையை தமிழ்நாட்டு மக்களுக்கு மறைத்து விட்டு வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பிரச்சாரம் வேறு. 

;