articles

img

புதுவாழ்வு திட்ட பணியாளர்களுக்கு ‘விடியல் தாருங்கள்'...

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 2006 ஆம் ஆண்டு அன்றையமுதல்வர் கலைஞரால் பெயர் சூட்டப் பட்ட 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் துவக்கப்பட்டது. பிறகு 'புதுவாழ்வுத் திட்டம்' என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.தமிழகம் முழுவதும் புதுவாழ்வுத் திட்டத்தில் பணியாற்ற மாவட்ட திட்ட மேலாளார், உதவி திட்ட மேலாளர், அணித் தலைவர், ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் பட்ட படிப்பு படித்தவர்களை முறையாக தமிழ்நாடு தேர்வாணையத் தின்‌ தேர்வுக்கு நிகராக தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு வைத்து சுமார் 1500 பணியாளர் தேர்வு செய்யப்பட்டனர்.

வறுமை ஒழிப்பு...
மகளிர் குழுக்கள் அமைத்தல், செயல்படுத்து தல், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோர், வறுமை ஒழிப்பு, தொழில்குழு அமைத்தல் மற்றும் அரசு திட்டங்கள் அனைத்தும் கிராம அளவில் கொண்டு சென்று 10 ஆண்டுகள் பணி ஆற்றினோம்.இந்த நிலையில், ஜூன் 2017 திட்டம் முடிந்துவிட்டது என்று அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. 29.6.2017 அன்று அனைத்துப் பணியாளர்கள் பெருந்திரள்  முறையீடு செய்தோம்.

காற்றில் பறந்த உறுதி..
அன்றைய நிர்வாகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழக ஊரக புத்தாக் கம் ஆகிய திட்டங்களில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தது.தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக் கம், தமிழக ஊரக புத்தாக்கம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்களில் பணியாற்ற பணியாளர்களை தேர்வு செய்ய ரிவர்ட் சொசைட்டி‌ என்கிற தனியார் தொண்டு நிறுவனத்தை தேர்வு செய்து தேர்வு நடத்தினர்.‌இதில் இதுவரை 750 பணியாளர் களை தேர்வு செய்ய
வில்லை. வெளியில் இருந்து பணியாளர் களை தேர்வு செய்தது.தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்‌ திட்டத்தில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய இயக்க மேலாளராக பணியாற்ற வயது வரம்பு 40 என்று உத்தரவு இடப் பட்டது. இதனால் பட்டதாரிகள் 10 ஆண்டுகள் உழைத்து விட்டு பிறகு எங்கே செல்வது! எங்கள் வாழ்க்கை கேள்விகுறியாக மாறிவிட்டது. இதனால் வேலையில்லா பணியாளர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் மனநிலை பாதித்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

விலகாத மர்மம்
6.11.2020, 7.11.2020 அன்று தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்திற்கு 35 உதவி திட்ட பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காகவே தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநராக பணிபுரிந்த சம்பத் மீண்டும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்திற்கு மாற்றப்பட்டதன் மர்மம் விளங்கவில்லை.

அவசர கோலம்...
4.1.2021 அன்று வேகமாக நேர்காணல் நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், 26.2.2021 அன்று அவசரமாக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. 10 வருடம் முன்அனுபவம் உள்ள பணியாளர்கள் ஒதுக்கப்பட்டு தேர்வு என்ற பெயரில் எங்களை நிராகரித்து அரசியல், பண பலம் மேலோங்கியது.

கொரோனா நிதிக்கு...
அன்றைய ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நடந்த புதுவாழ்வு சங்க செயற்குழு கூட்டங்களில் ஆறு வகையான பணப்பலன்கள் மற்றும் டெரிமினல் பெணி பிட் வழங்கப்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.ஆனால், 1500 பணியாளர் களுக்கும் வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்பு (இஎல்), சரண்டர் பணம் வழங்கப் படவில்லை. ஒரு நபருக்கு மட்டும் 1,14,745 ரூபாய் வழங்கப் பட்டது. டெரிமினல் பெனிபிட் நிதி வழங்கப் படவில்லை. எனவே ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள பணத்தை இந்த கொடிய வைரஸ் தொற் றால் சிக்கி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண நிதியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்வு கொடுங்கள்!
எனவே, பட்டதாரிகள் 10 ஆண்டுகள் திட்டத்தில் பணியாற்றி, புதுவாழ்வு திட்ட வேலையில்லா பணியாளர்களுக்கு காலியாக உள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழக ஊரக புத்தாக்கம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்களில் அனுபவத்தை கணக்கில் வைத்து, எந்த நிபந்தனையும் இன்றி பணி வாய்ப்பு வழங்கி எங்களுக்கு விடியல் தாருங்கள் என்று புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் முதலமைச்சரிடம் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

கட்டுரையாளர் : ஆர்.தமிழ்அரசு, மாநில தலைவர், புதுவாழ்வு திட்டபணியாளர் சங்கம்

;