articles

img

மு.க.ஸ்டாலின் ஆட்சியின் முதல் நூறு நாட்கள்...

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  2021 மே 7 அன்று பதவியேற்றது. ஆக.14 (இன்று) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது ஆட்சியின் நூறாவது நாளை எட்டுகிறார். நூறு நாட்களும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர் அனைத்து துறைகளிலும் மக்கள் நல நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு தமது அமைச்சரவையை முடுக்கிவிட்டார்.  குறிப்பாக பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், திருக்கோயில் நில மீட்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நடவடிக்கை, காவலர் வாராந்திர விடுப்பு, இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில அரசுக்கு பொருளாதார ஆலோசனைக்குழு, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு, மதுரையில் கலைஞர் நூலகம், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம், சமூகநீதிக்கான உள்ஒதுக்கீடு, உள்ளிட்ட மிக முக்கிய நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் அரசு மேற்கொண்டது.  இந்த நூறு நாட்களும் தமிழக அரசு என்னென்ன திட்டங்களை முன்னெடுத்தது என்பது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வெளியிட்டுள்ள விபரம் இது.

1.    தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 கொரோனா நிவாரண நிதியுதவி

2.    ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு

3.    அனைத்து மகளிருக்கும் அரசு போக்குவரத்துக் கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்

4.    மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் மீது  உடனடித்தீர்வுக்காக ‘‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’ என்ற புதிய துறை உருவாக்கம்

5.    தனியார் மருத்துவமனைகளில், கொரோனாநோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களுக் கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசே ஏற்பு

6.    கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி நோய்த்தடுப்பு விழிப்புணர்வுப் பணிகள்மற்றும் நோய்த் தடுப்பு பணிகளை ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்

7.    கொரோனா கட்டளை மையத்திற்கு 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

8.    சுய முதலீட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் முதலீட்டு மானிய திட்ட மதிப்பீட்டில் 60விழுக்காடு தொகை உடனடியாக விடுவிப்பு. 

9.    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடனுதவி பெறும்போது முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து டிசம்பர் 2021 வரை விலக்கு 

10.    மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, தொழில் பாது காப்புத்துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களை புதுப்பிக்க டிசம்பர் 2021 வரை கால அவகாசம்.

11.    கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் மற்றும்தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட 5 விழுக்காடு பின்முனை வட்டி மானியம் நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிப்பு

12.    சிட்கோ மனைகள் Fast Track அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு 

13.    சிட்கோ நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய மனை விலை தவணை தொகை மற்றும் தொழில் கூடங்களுக்கான வாடகை போன்றவற்றை செலுத்த மேலும் 6 வார கால அவகாசம் நீட்டிப்பு

14.    அனைத்து மாவட்டங்களிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதிற்கும் மேற்பட்ட 1 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே கொரோனா தடுப்பூசி 
15.    ஆட்டோ ரிக் ஷா  மற்றும் டாக்சி ஆகியவற்றுக்கான சாலை வரி கட்டணங்கள் செலுத்த 3 மாதங்களுக்கு கால அவகாசம்

16.    தொழில் துறை மூலமாக வழங்கப்படும் மூலதன மானியம் ஒரே தவணையாக வழங்கப் படும்

17.    பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தொழில் வரியை செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம்

18.    அத்தியாவசிய தொழிற்சாலைகள் இயங்குவதற்கு ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர சேவை மையம் அமைப்பு 

19.    முன்களப்பணியாளர்களான மருத்துவர் களுக்கு ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாத காலத்திற்கான ஊக்கத் தொகையாக 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், தூய்மைப் பணியாளர்கள், ஆய்வுக் கூட பணியாளர்கள், சிடி ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகை

20.    அனைத்து மாவட்ட சுகாதார மையங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

21.    கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, அனைத்து சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைப்பு 

22.    ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ரத்து.23.    கொரோனாத் தொற்று ஒழிப்புப் பணியில் அரசுடன் தொண்டு நிறுவனங்களை இணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக் குழு 

24.    கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் 

25.    முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அவரவர் பகுதிகளிலேயே வாகனங்கள் மூலம் விநியோகம்

26.    பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப் படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு.

27.    அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசுஅங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊக்கத் தொகை ரூ.3ஆயிரத்திலிருந்து                                     ரூ.5ஆயிரமாக உயர்வு 

28.    பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இயற்கை எய்தினால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.5 இலட்சத்திலிருந்து              ரூ.10 இலட்சமாக உயர்வு 

29.    கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 அத்தியாவசியப் பொருட் கள் அடங்கிய தொகுப்பு

30.    கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 இலட்சம் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் அரசு ஏற்பு

31.    கொரோனாவால் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 இலட்சம் நிவாரணத் தொகை

32.    அரசு காப்பகம் அல்லது விடுதிகளில்பெற்றோர் இன்றி,  உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவித் தொகை, அவர்கள்18 வயது நிறைவடையும் வரையில்               வழங்கப்படும்

33.    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ள திருகோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும்அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண                              உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள்

34.    பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதி, பாசனத்திற்காக 04.06.2021 முதல் 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவு

35.    கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உத்தரவு

36.    மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட உத்தரவு. 

37.     “டவ் தே” புயல் காரணமாக காணாமல் போனநாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச்  சேர்ந்த 21 மீனவர் குடும்பங்களின் வறிய நிலையினை கருத்தில் கொண்டு மேற்கண்ட காணாமல் போன மீனவர்களது                                    வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் என்ற முறையில் ரூ.4.20 கோடி நிவாரணத் தொகையாக 21 மீனவ குடும்பங்களுக்கு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

38.    தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை

39.    தென் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய,பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை.

40.    மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் இரண்டு இலட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய “கலைஞர் நினைவு நூலகம்.”

41.    தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் விருது, பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய்                           ரொக்கப் பரிசும் வழங்கப்படும்

42.    தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும்                   மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் அரசு வீடு

43.    திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள்

44.    திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு அரசுப்பேருந்துகளில் இலவச பயணச் சலுகை

45.    சென்னையில் உள்ள 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி

46.    நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைப்பு

47.    மாணவர் நலன் கருதி நடப்பு ஆண்டிற்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து

48.    மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர்  ஜெ.ஜெயரஞ்சன் மற்றும் 9 உறுப்பினர்கள் நியமனம்

49.    முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்கான அனைத்து உயிர்காக்கும் மருந்து களையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு

50.    கொரோனா பெருந்தொற்று காலங்களில் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கான காலதாமத கட்டணத்திலிருந்து விலக்களித்து, கால தாமத கட்டணத்தை அரசே ஏற்பு

51.    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணைய தளத்தில் வெளியீடு

52.    கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து, இராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு

53.    தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆய்ந்து, பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம்

54.    டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்கும் வகையில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம்

55.    கொரோனா தொற்று காலத்தில் களப்பணி யாற்றிவரும் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம்வீதம் ஊக்கத் தொகை வழங்க 58 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

56.    முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் கொரோனா நிவாரண நிதியுதவி

57.    பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமைஅலுவலகத்தில் “மின்னகம்” என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம்

58.    ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்போட்டியில் இந்தியாவிலிருந்து வாள் வீச்சுப் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீராங்கனை செல்வி பவானி தேவி 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி

59.    கொரோனா பெருந்தொற்றின் 3ஆம் அலையினை சமாளிப்பதற்கான அனைத்து மருத்துவக் கட்டமைப்பு வசதிகளும் மேம்பாடு

60.    திரவ மருத்துவ ஆக்சிஜனையும், அது தொடர்புடைய கருவிகளையும் தயாரிக்கும்தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவு வதற்கு, தனியார் முதலீட்டாளர்களுக்கு சிறப்புத் தொகுப்பு சலுகை

61.    சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வுமத்திய நிறுவனத்திற்கு புத்துயிரூட்டப்படும்

62.    லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உரிய அதி காரம் வழங்கப்பட்டு புத்துயிரூட்டப்படும்

63.    எங்கும் எப்போதும் அரசு சேவைகளை பொதுமக்கள் இணைய வழி வாயிலாக உடனுக்குடன் பெற வழிவகை

64.    வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதையை வகுத்துத் தமிழக அரசிற்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கிட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு

65.    வேளாண்மைக்கென்று தனியாக ஒரு நிதிநிலை அறிக்கை

66.    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்குப் புத்துயிரூட்டப்படும்

67.    அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைப்பு68.    சென்னையில் மாநகரக் கட்டமைப்பை நவீன சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில் ‘சிங்காரச் சென்னை 2.0’

69.    சுற்றுச்சூழல், நகரத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய ‘சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’

70.    மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து அமைப்புகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் 

71.    தமிழ்நாட்டின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில் பெருந்திட்டம்

72.    கோயில்களின் பராமரிப்பைச் செம்மைப்படுத்துவற்கு மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனைக்குழு

73.    மகளிர் சுய உதவிக்குழு இயக்கத்திற்குப் புத்துயிர் 

74.    தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை

75.    இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிதண்ணீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து  5 நாட்களுக்கு ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவு 

76.    கொரோனா நோய்த்தொற்றால் பணி வாய்ப்பை இழந்த குடும்ப அட்டையில்லாத புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களின் பசிப்பிணியை அகற்றும் வகையில் 1 லட்சத்து 29ஆயிரத்து 444 தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்            பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு

77.    சேலம் மாவட்டம், மலையாளப்பட்டி கிராமத்தில் உள்ள வன சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையின்போது ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த இடையப்பட்டி கிராம த்தைச் சேர்ந்த முருகேசன் குடும்பத்திற்கு பத்து இலட்சம் ரூபாய்                                     முதலமைச்சரின்  பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு 

78.    பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காகஇந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம் 

79.    பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு 

80.    கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் ரத்து

81.    சுற்றுச் சூழலைக் காக்க அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து

82.    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் திருத்தியமைப்பு

83.    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் திருத்தியமைப்பு

84.    முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்கு வதற்காகவும், கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்காகவும்              100 கோடி ரூபாய்

85.    பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் மகள் வழிப் பேரன் சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5               இலட்சம் ரூபாய் நிதியுதவி

86.    இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிர்வகிக்கப்படும் 100 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு 

87.    100 திருக்கோயில்களின் தெப்பக்குளங்கள் சீரமைத்தல் 

88.    100 திருக்கோயில்களில் நந்தவனங்கள் அமைத்தல்

89.    ஜப்பான் நாட்டின் டோக்கியோஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 5 இலட்சம் 

90.    ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தொய்வின்றி தொடர்ந்து இயங்க ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி

91.    மாநில அளவிலான உயர்கல்வித் திட்டங் களின் மேம்பாட்டிற்கும் மற்றும் மாநிலத் திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் கூழுவின் திட்டங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் திருத்தியமைப்பு

92.    நாகூர் தர்கா சின்ன ஆண்டவர் கந்தூரி மற்றும் பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு இலவசமாக 45 கிலோ சந்தனக்கட்டைகள்93.    சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு                                         தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றத்தின் பெருமையை நினைவு கூரும் வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழா 

94.    சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் நினைவுத் தூண்

95.    “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு”, 49 திட்டங்களின் மூலம் 28,508கோடி ரூபாய் முதலீட்டில் 83 ஆயிரத்து 482 நபர்களுக்கு வேலைவாய்ப்பு 

96.    தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத் தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர இணையதளம் 2.0

97.    தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவிகித மாக உயர்த்த நடவடிக்கை

98.    வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற ஒரு புதிய துறை அமைக்க நடவடிக்கை

99.வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்க நடவடிக்கை

100.அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20 சதவிகித இடஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட             வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம்

101.தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான் “தகைசால் தமிழர்” விருது102.தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத் தின்கீழ், அதிகமான தொழிலாளர்கள் உள்ள 
      இடங்களில் மருத்துவமனைகள் 

103.கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியை உருவாக்கிய திருவாரூர் இளம் விஞ்ஞானி செல்வன் எஸ். எஸ். மாதவ்வின் கணினி தொடர்பான உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் அரசு உதவி104.மகளிர், குழந்தைகள், திருநங்கையர்,                             மூத்தகுடிமக்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் நலன் பேணுவதில் உறுதி

105.ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று பதக்கங்கள் வெல்லும் வகையில் உலக தரத்தி லான பயிற்சி மற்றும் கட்டமைப்பு வசதிகள்

106.கடந்த 10 ஆண்டுகளில் பத்திரிகையாளர் கள் மீது போடப்பட்ட 90 வழக்குகள் ரத்து.

;