articles

img

பொதுவுடைமை அளித்த கொடை....

நீண்ட நெடிய போராட்ட வரலாறுகொண்ட தோழர் சங்கரய்யாவின் முதல் போராட்டம் இந்தித்திணிப்பை எதிர்த்து நடந்ததுதான். அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி.அவர் 1938ல் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்குப் பெரியார், சிங்காரவேலர், ஜீவா போன்ற தலைவர்களும், தமிழ் அறிஞர்களும்எதிர்த்துத் தெரிவித்தார்கள். இதையடுத்து மதுரைக்கு வந்த ராஜாஜிக்கு எதிர்ப்புத்தெரிவித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.இப்போராட்டத்தில் மாணவராக சங்கரய்யா பங்கேற்றதோடு தீண்டாமை ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் உழைக்கும் மக்களின் சுரண்டலுக்கு எதிரான போராட்டம்போன்றவற்றில் அதீத ஈடுபாடு காட்டியிருக்கிறார்.

நாட்டின் சுதந்திரத்திற்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி ஏறத்தாழ 8 ஆண்டுகள் சிறை வாழ்வோடு எண்பது ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டு அரசியலில் நேர்மையையும், எளிமையையும் ஏற்று நூற்றாண்டு காணும் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதில் ஆதித்தமிழர் பேரவை பெருமிதம் அடைகின்றது.பொதுவுடைமையின் சிறந்த வழிகாட்டியாகவும் வாழும் தலைவர்களில் முதன்மையான மூத்த தோழராகவும் சங்கரய்யா அவர்கள் திகழ்வது பொதுவுடைமை அளித்த “கொடை” என வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன்.

கட்டுரையாளர் : இரா.அதியமான்,  நிறுவனர், ஆதித் தமிழர் பேரவை 

;