articles

img

புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதலாமா? (குறுங்கட்டுரை)

அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள புதிய தேர்வு எழுதும் நடைமுறைகளில் புத்தகத்தை பார்த்தும் தேர்வு எழுதலாம் என்ற முறை பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அமைச்சரோ, புத்தகத்தை பார்த்து எழுதினால் அத்தகைய தேர்வுகளே தேவையில்லை என கருத்து தெரிவித்துள்ளார். புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதுவது என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசின் துறைகளில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. வருவாய்த்துறையில் இந்திய குற்றவியல் சட்டம், தண்டனைச் சட்டம் சாட்சி குறித்த சட்டம் (சி.ஆர்.பி. சி., ஐ.பி.சி.,எவிடன்ஸ் ஆக்ட்) தொடர்பான தேர்வுகள் எழுதும்போது கேள்வித் தாளில் ஒரு குற்றச் சம்பவம் கதைபோல் ஒரு பத்திவிவரிக்கப்பட்டிருக்கும். தேர்வு எழுதுபவர் அதை முழுமையாகப் படித்து அந்த குற்றத்திற்கான செக்சன், விசாரிக்கும் நீதிமன்றத்தின் வரம்பு மற்றும் தண்டனை இவற்றை எழுத வேண்டும். மூன்று புத்தகங்கள் கையிலிருந்தாலும் முன்கூட்டியே முழுமையாக படித்திருந்தால் மட்டுமே பதில் எழுத முடியும். மனப்பாடம் செய்து கேள்வி பதில் எழுதுவதைவிட படித்துணர்ந்து பார்த்து எழுதும் முறை மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும். ஆர்வத்தை தூண்டும்.

சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி கேள்வி கேட்கும் முறை, புத்தகங்களை பயன்படுத்தி பதில் எழுதும் முறை,பல்வேறு நாடுகளில் இருந்து வருகின்றன.இன்றைய கொடும் நோய்த் தொற்றுக் காலத்தில்கல்வி முறைகளில் மட்டுமல்லாமல் நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்தாளர்  : க.ராஜ்குமார், ஈரோடு

;